பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/423

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் தொடர்புடையோர் 405 துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய் அறம்புலந்து பழிக்கும் அண்க ணாட்டி எவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளேநின் மடமகள் வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே" (துறந்ததன்-துறந்ததனை ஏதுவாக; அட-வருத்த: சாஅய்உடல் மெலிந்து: அறம்-அறக்கடவுள்; புலந்து-பிணங்கி; அண்கணாட்டி-அயலிடத்து இருப்பவள்; எவ்வம்-துன்பம்: ஏமம்-பாதுகாவல்; விடலை-பெருங்குடித் தோன்றல்; முந்துற-முன்வாரா நிற்ப) இதில் அன்னாய், நின்னைத் துறந்து சென்ற அவளை நினைத்துக் கொண்டு துன்பம் வருத்த மெலிந்து நல்வினையைப் பழித்து வருந்தும் தாயே, இதோ வந்து கொண்டிருக்கின்றாள் நின்மகள். தலைவன் முன்னே வர நின்மகள் பின்னால் வருகின்றாள். வருத்தத்தை விடுக' என்று அப்பார்ப்பார் கூறுவதைக் காண்க." (v) விறலியர் விறலியர் என்பார், ஆடலும் பாடலும் நிகழ்த்தும் ஒருவகைச் சாதிப் பெண்டிர். பாடல் பாடுவோரைப் பாடினி என்றும், அரங்கில் நடிப்போரை விறலியர் என்றும் பிரித்துப் பேசுவதும் உண்டு.” விறலி-விறல் படப் பாடி ஆடும் மகள்; விறல்-சத்துவம், செலவில் தேற்றலும் புலவியில் தணித்தலும் வாயில் வேண்டலும் வாயில்நேர் வித்தலும் தெரிஇழை விறலிக் குரிய தாகும்." என்று விறலிக்குரிய செயல்களைத் தொகுத்துப் பேசுவர் நாற் கவிராச நம்பி. 33. ஐங்குறு-393. - * * * 34. நூலைப் பதிப்பித்து உரை கூறுவோர் நற்றாய்க்கு அயலார் கூறுவதாகவே கொண்டுள்ளனர். 35. பாடினி-தலைவிமாட்டுப் பாங்காயொழுகும் பாடினி, விறலியர்-தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியர் (கற்பியல்-52நச்.உரை). பாடினியைப் பாட்டி என்றும் வழங்குவது உண்டு. 36. நம்பி அகப்-96