பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*06 அகத்திணைக் கொள்கைகள் பரத்தையிற் பிரிந்த தலைவன் தலைமகளது புலவியைத் தீர்க்குமாறு விறலியை அனுப்புகின்றான். அதனை நன்கு அறி கின்றாள் தோழி, எனினும், இவ்விறலியே தூதாக நடந்து தலைவனைப் பரத்தை இடத்துச் சேர்ப்பித்தனள் எனக் கருது கின்றாள். ஆகவே, அவள் ஆயத்தாரை நோக்கி, 'இந்த விறலி நம் தலைவனை மற்றுமொரு பரத்தைபால் உய்க்கவே வருகின் றாள். நாம் அவனைக் காத்துக்கொள்வோம்; எழுவீராக. இவள் கருத்து முற்றும் எனின், நாம் இருந்து பயன் என்ன?’ என்று வெகுண்டு கூறுவதாக வரும் நற்றிணைப் பாடல்: மடக்கண் தகரக் கூந்தல் பணைத்தோள் வார்ந்தவால் எயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கின் பிணையல் அம்தழைத் தைஇத் துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின்றனளே: எழுமினோ எழுமின்னங் கொழுநற் காக்கம் ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒருவேற்கு ஓடி யாங்குநம் *x பன்மையது எவனோஇவள் நன்மைதலைப் படினே' (மடக்கண்-மடப்பத்தையுடைய நோக்கு; தகரம்-மயிர்ச் சாந்து: வால் எயிறு-வெள்ளிய பற்கள்: செறிகுறங்கு. நெருங்கிய தொடை, துணைஇலள்-ஒப்பு இல்லாத விறலி; காக்கம்-காப்பேம்; துவன்றிய-நெருங்கிய; நன்மை தலைப் படுதல்-காரியம் கைகூடுதல்; ஒரு வேல்-ஒப்பற்ற வேல்; நம் பன்மை-நம் கூட்டம்.) இதில், 'ஆரியர் துவன்றிய மூள்ளுரின் போர்ப்பறந்தலையிலே அவ்வாரியர் பலரும் ஒருங்கே உருவிய வாட்படைகள் அனைத்தும் பேரிசை மலையனது ஒரோ ஒரு வேற்படைக்கு ஆற்றாது இரிந் தோடினாற் போன்று யாமும் இவள் ஒருத்திக்குப் புறங்கொடுத்து ஓடவேண்டியதுதான். நாம் கூட்டமாக இருந்து பயன் என்ன? என்று தோழி ஆயத்தாரை நோக்கிக் கூறியது காண்க. இப்பாடல் தோழி விறலிக்கு வாயில் மறுத்ததாக வந்துள்ளது. - 37. நற்-170