பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் தொடர்புடையோர் . 407 பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் . பேணிச் சொல்லிய குறையினை எதிரும்?" என்ற தொல்காப்பிய விதிக்கு இலக்கியம் காட்டுவர் நச்சினார்க் இனியர், எதிரும் என்றது,அவர் வாயில்வேண்டியவழித் தோழி அவர்க்கு மறுத்தலும், மறுத்தாள் போல நேர்தலும் கூறியதாம்" என்று விளக்குவர் அவர். தலைவன் பரத்தையிற் பிரிந்து சென்று விடு திரும்புகின்றான். விறலியை வாயில் வேண்டுமாறு துனது அனுப்புகின்றான் தலைவியிடம், தலைவி வாயில் மறுக்கின்றாள்: :மாமை நிறத்தினையுடைய மேனியினையும் ஆய்ந்த அணி யினையுமுடைய பரத்தையின் முத்து மாலையை ஏந்திய முலை யினையுடைய மார்பினை ஆராக்காதலுடன் தழுவினான்; இதனால் அவள் அணிந்திருந்த பூமா லையும்குழைந்து போயிற்று. அளவற்ற வெள்ளையுப்பின் குவியல் பெருமழையால் உருகினாற் போல என் மெல்லிய தோள்கள் மெலிந்தன; வளையல் களும் கழன்றொழிந் தன.இப்பொழுது நீசொல்லுவதென்னை?" என்கின்றாள். சங்க இலக்கியத்தில் விறலி பங்கு பெறும் பாடல்கள் அரியனவாகவே உள்ளன, .

  1. مؤنٹیمنی (wi]

கூத்தர் என்பார், தலைவனுக்கு இன்றியமையாத கூத்து நடத்தும் ஆண்கள். . இவர்கள் தலைவன்-தலைவியரின் கற்பு நெறியில் வாயில்களாகச் செயற்படுவர். தொல்காப்பியர், தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும் பல்லாற்றானும் ஊடலில் தணித்தலும் உறுதி காட்டலும் அறிவுமெய் நிறுத்தலும் ஏதுவின் உரைத்தலும் துணியக் காட்டலும் அணிநிலை உரைத்தலும் கூத்தர் மேனச்சி என்ற நூற்பாவால் அவர்களுக்குரிய செயல்களைத் தொகுத்துக் கூறுவர். தொல்லவை உரைத்தல் என்பது, முன்புள்ளார் 38. கற்பியல் 9 39. அகம்-206. 40. கற்பியல்-21 (இளம்)