பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 அகத்திணைக் கொள்கைகள் சிச்சிலிப் பறவை; ஏய்ப்ப-ஒப்ப, அறல்-நொய் மணல், வரித்த-கோலம் செய்த, வீ-பூ: துமித்தல்-அறுத்து ஏகுதல்; நேமி சக்கரம்; போழ்ந்த-பிளந்த விரைவு நீர் முடுக. விரைந்து நீர் முடுகிச் செல்ல; நெடுந்தகை-தலைவன்) இதில், '(முல்லை நிலத்தில்) சிச்சிலிப் பறவையின் சிறகினை யொத்த அறலில் வண்டுகள் தேனுண்ணும் நறிய பூக்களைக் காற்று உதிர்த்துக் கோலம் செய்துள்ளது. தலைவனுடைய தேர் அக் கோலத்தை அறுத்துச் செல்கின்றது. தேருருள் பிளந்து சென்ற கவட்டில் வரிசையாகச் செல்லும் பாம்பு போல் நீர் முடுகிச் செல்இ! கின்றது. இத்தகைய தண்ணிய முல்லையங் காட்டினைக் கடந்து தலைவியிருக்கும் ஊருக்குள் தேர் செல்லுகின்றது. இன்று தலைவி இல்லத்தில் விருந்து கட்டாயம் இருக்கும் என்கின்றனர் இளையர். (vi). விருந்தினர் இவர் தலைவனும் தலைவியும் அன்பு செய்து விருந்தோம்பும் மக்கள். தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒருவராக இவர்களையும் குறிப்பர் தொல்காப்பியர்." பரத்தையிற் பிரிந்த தலைவன் தலைவியின் ஊடல் தணியப் பெறாது என்று கருதி விருந்தோடு வீடு புகுகின்றான். தலைவி தன் ஊடலை அடக்கி விருந்தினை எதிர் கொண்டு வரவேற்கின்றாள். இதனால் மகிழ் வுற்ற தலைவன் கூறுவதாக நற்றிணைப்பாடல் அமை ந்துள்ளது.* "என்னுடன் முனிவுற்றிருந்த எம் தலைவி விருந்து வந்ததும், வாழை இழையைக் கொய்து வந்து அதன் அடிக்காம்பு பருத் திருந்ததால் அதனை வகிர்ந்து பரிக்கலம் அமைத்தாள். அட்டிலறைக்குச் சென்று அட்டில் ெ தாழிலைத் தொடங்கினாள், நெற்றி முழுதும் வியர்வை அரும்ப, அதையும் தன் முன்தானையால் துடைத்துக் கொண்டாள். நான் சென்று அங்கு அவளை உற்று நோக்கினேன். என்ன இளஞ்சிரிப்பு: இப்படி ஒரு விருந்து நாடோறும் வந்தால் நன்றாக இருக்கும். பிணக்கு என்பதே 47. கற்பியல்-52 48. நற். 120