பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐந்தினைச் சூழல் 25 மேற்குறிப்பிட்ட ஐந்து ஒழுக்கங்களையும் அவை இன்ன இன்ன நிலத்திற்குரியவை என்பதையும், போக்கெல்லாம் பாலை; புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கஞ்சேர் ஊடல் அணிமருதம்:-நோக்குங்கால் இல்லிருத்தல் முல்லை; இரங்கல் நறுநெய்தல் சொல்லிருத்த நூலின் தொகை. என்ற பழம்பாட்டால் அறியலாம். இவ்வாறு சீரும் சிறப்புடனும் வாழ்ந்த நம் முன்னையோரின் வாழ்க்கை முறை அறிந்து இன்புறற்பாலது. இந்த அறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இந்த ஐந்து திணைக்கு அமைந்த முறையை இளம்பூரணர் இங்ங்ணம் புலப்படுத்துவர்: 'இவ்வறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இவ்வைந்திணைக்கு உரியவாறு என்னையெனின்: சிறப்புநோக்கி என்க. என்னை சிறந்தவாறு எனின், முல்லையாகிய நிலனும், வேனிற்காலத்து வெப்பம் உழந்து மரனும் புதலும் கொடியும் கவினழிந்து கிடந்தன. புயல்கள் முழங்கக் கவின் பெறும் ஆகலின், அதற்கு அது சிறந்ததாம். மாலைப்பொழுது இந்நிலத் திற்கு இன்றியமையாத முல்லை மலரும் காலமாதலானும், ஆண்டுத் தனித்திருப்பார்க்கு இவை கண்டுழி வருத்தம் மிகு தலின், அதுவும் சிறந்தது ஆயிற்று. குறிஞ்சிக்குப் பெரும்பான் மையும் களவிற் புணர்ச்சி பொருளாதலின், அப்புணர்ச்சிக்கு, தனி இடம் வேண்டுமன்றே, அது கூதிற் காலத்துப் பகலும் இரவும் நுண்துளி சிதறி இயங்குவார் இலராம் ஆதலான் ஆண்டுத் தனிப்படல் எளிதாகலின், அதற்கு அது சிறந்தது. நடு நாள் யாமமும் அவ்வாறாகவின் அதுவும் சிறந்தது. மருதத்திற்கு நிலன் பழனஞ் சார்ந்த இடமாதலின், ஆண்டு உறைவார் மேன் மக்களாதலின் அவர் பரத்தையிற் பிரிவுழி அம்மனையகத்து உறைந்தமை பிறர் அறியாமை மறைத்தல் வேண்டி வைகறைக் கண் தம் மனையகத்துப் பெயரும் வழி, ஆண்டு மனைவி ஊட லுற்றுச் சார்கிலளாமாதலால் அவை அந்நிலத்திற்குச் சிறந்தன. அநய்தற்குப் பெரும்பான்மையும் இரக்கம், பொருளாதலின், தனிமையுற்று இரங்குவார்க்குப் பகற் பொழுதிலும் இராப் பொழுது மிகுமாதலின், அப்பொழுது வருதற்கேதுவாகிய எற்பாடு கண்டார் இனி வருவது மாலையென வருத்த முறுதலின் அதற்கு அது சிறந்தது என்க.'" 10. டிெ.12 (இளம்பூரணர் உரை).