பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் தொடர்புடையோர் 413 யுடைய குதிரைகளை, கடிவாளத்தை ஆய்ந்து செலுத்தி, கொடிஞ்சி பொலிவுற்றுக் காணுமாறு தேரினைச் செலுத்து வாயாக’ என்று பாகனை நோக்கித் தலைவன் கூறுவதைக்காண்க. தலைவன் பாகனிடம் பேசும் பொழுதெல்லாம் தலைவியின் நற்பண்புகளைப் புகழ்வதுடன் தானும் அவளும் அன்புடன் இனிய வாழ்வு நடத்தியபோது ஏற்பட்ட இனிய நிகழ்ச்சிகளைக் குறிப் பிட்டுப் பேசுவதைக் காணலாம். இதனால் தலைவன் தன் பாகன் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் மதிப்பும் தெளிவாகப் புலனா கின்றன. தேரினைக் கடவும் பாகனின் திறன் அடிக்கடி தலைவனால் குறிப்பிடப்பெறுவதைப் பாடல்களில் காண் கின்றோம். 'செல்க தேரே நல்வலம் பெறுந' 'நூலறி வலவ! கடவுமதி' "இடிமறந் தேமதி வலவ!'" 'ஊர்மதி வலவ! தேரே' "வல்விரைந் தூர்மதி நல்வலம் பெறுந' தான் விரைவில் வீட்டை அடைய வேண்டும் என்ற அவாவினால் இங்ஙனம் பாகனைப் புகழ்கின்றான். தலைவன் பாகனும் இதனால் உற்சாகமுற்றுத் தேரினை விரைவாகச் செலுத்துகின்றான். தலைவியை விட்டுப் பிரிந்து வினைமேற் சென்ற தலைவன் திரும்பி வருகின்றான்; தேரின்மீது வருகின்றான். தேர்ப்பாகனை நோக்கி 'இன்று மாலை வருவதற்குள் தலைவி இருக்குமிடத்திற்கு விரைவில் தேரைச் செலுத்து வாயாக’ என்கின்றான். இச்செய்தி யைக் கொண்ட குறுந்தொகைப் பாடல்: பரவலற் படுநீர் மாந்தித் துணையோ(டு) இரலை நன்மான் நெறிமுதல் உகளும் மாலை வாரா அளவைக் கால்இயல் கருமாக் கடவுமதி பாக! நெடுநீர்ப் பொருகயல் முரணிய உண்கண் தெரிதிம் கிளவி தெருமரல் உயவே" 54. டிெ - 34 55. டிெ - 114 56. டிெ - 134 57. டிெ - 154 58. டிெ - 234 59. குறுந் - 250