பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/433

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் தொடர்புடையோர் 415 இடம்; ஒல்கி - சென்று; வந்தீக வருக, அம் தீம்கிளவி - அழகிய இனிய சொல்) இதில், பாகனே, என் மாளிகையில் என் அருமை மகன் மெருகிட்ட அணிகலன்களை அணிந்த வண்ணம் துயில்வான். நம் வருகையை அறியும் தலைவி நம்மை எதிர்கொள்ள எந்தாய் வருக என்று மகனை எழுப்புவாள். இருவரும் வந்து என்னைக் காண்பர். அந்தக் காட்சி நெடுவழி வந்த வருத்தத்தைப் போக்கும். காதலியின் சொல் எனக்கு அமிழ்தமாகவும் இருக்கும். ஆதலின் அவ் வினிய சொல்லை யான் கேட்குமாறு நின் கைவன்மையால் விரைந்து தேரைக் கடவுக’ என்று தலைவன் கூறுவதைக் காண்க. முன்னர்க் குறிப்பிட்டவாறு அகநானூற்றிலும் வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாகப் பல பாடல்கள் உள்ளன. ஒன்றில் வரும் காட்சியைக் காண்போம். முன்இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது ஊர்க பாக ஒருவினை கழிய தண்குட வாயில் அன்னோள் பண்புடை ஆகத் (து) இன்துயில் பெறவே" (முன் இயங்கும் - முற்படக் செல்லும்; பின் நிலை ஈயாது. இனிப் பின் இல்லாதபடி, கழிய - சுரத்தை நாம் கழிய: குடவாயில் - ஓர் ஊர்: ஆகம் - மார்பு, இன்துயில் - இனிய துயில்) இதில், குளிர்ந்த குடவாயில் என்னும் ஊரையொத்த சிறப் பினளாகிய என் தலைவியின் ஆகத்தின் கண்ணே இன்துயில் பெற விரும்புகின்றேன். ஆகவே, இச்சுரத்தைக் கடந்து செல்லும் நோக்கத்துடன் தேரினை விரைந்து செலுத்துவாயாக’ என்று பாகனை நோக்கித் தலைவன் கூறுவதைக் காண்க. இன்னொரு தலைவன் பகைவயிற் பிரிந்து சென்றவன் பகைவென்று அவன் தன் இல்லிற்கு மீளுகின்றான். பாகன் தேரை விரைந்து செலுத்த ஒல்லையில் இல்லம் எய்துகின்றான். இவன் பாகன் திறத்தினை மனமாறப் போற்றுவதுடன் தன் ஆகத்துடன் கட்டித் தழுவித்தன் மகிழ்ச்சியையும் புலப்ப்டுத்துகின்றான்."" 62. அகம் - 44 63. நற். 121