பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-26 அகத்தினைப் பாடல்கள் இதுகாறும் கூறியவற்றால் அகப் பொருளின் பெருமையை ஒருவாறு கண்டோம். அகப்பொருள் வரம்புடையது என்றும், தனிமையுடையது என்றும், ஞால நோக்குடையது என்றும் அறிந்து தெளிந்தோம். பல்வேறு காதல் நிலைகளிலிருந்து அகப்பொருள் என்ற ஒன்றைப் புடமிட்டுத் தூய்மைப் படுத்தி உலகுக்கு) அளித்தனர் தமிழ் மூதறிஞர்கள். ஞாலமக்களனைவருக்கும் பொதுவான அகமரபு நெறிகளை வகுத்துக் காட்டினர். அந்த அகமரபு நெறின் தாம் சங்கத்துச் சான்றோர்களின் அகத்திணைப் பாடல்களில் ஊடுருவிச் சென்று அவற்றிற்குப் பெருமையையும் ஞால நோக்கினையும் அளித்துள்ளன என்ற பேருண்மையை அப்பாடல்களில் ஆழங்கால்பட்டுத் திளைப்பவர்களே நன்கு அறிவர். அங்ங்ணம் அந்நெறிகள் ஊடுருவிச் சென்றுள்ள அகத்திணைப் பாடல்களின் பொதுப் பண்புகளை ஈண்டு எடுத்துக் காட்டுவோம். பெயர் குறியாப் பண்பு : அகத்திணை யுலகில் காணப் பெறும் மக்களைப்பற்றிய குறிப்பினைத் தொல்காப்பியர், மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்." என்ற நூற்பவால் தருவர். இந்நூற்பாவில் முன்னடி அகத்திணைக் குரிய நிலைக் களத்தையும் பின்னடி அகத்திணை பாடும் இலக்கிய நெறியினையும் குறிப்பிடுவது தெளிவு. ஐந்திணைக் காதலொழுக் கங்கள் மன்பதை அனைத்தையும் கருதியவையாதலின் இவற்றைத் தனியொருவர் பெயர் காட்டிப் புலவர்கள் பாடார் என்பது தொல் காப்பியர் கூறும் உண்மை. சங்க இலக்கியத்திலுள்ள 1862 அகப் பாடல்களிலும் காதலாட்களுக்கு, கிளவிமாந்தர்கட்கு, இயற்பெயர் கள் சுட்டப் பெறவில்லை என்பது ஈண்டு அறியப்பெறும். ஐந்திணை 1. அகத்திணை-57 (இளம்).