பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/438

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


420 அகத்திணைக் கொள்கைகள் பெயர்கள் வாரா. அங்கு எவ்வகையான மெய்ப் பெயருக்கும் புனை பெயருக்கும் இடம் இல்லை. இருவகை வழக்குகள் செய்யுட்களை யாப்போர் இருவகை வழக்குகளை மேற்கொள்வதைக் காண்கின்றோம். மக்கள் வாழ்க்கையில் இயல்பாகக் காணப்பெறும் ஒழுக்கம்-நடக்கை முறை-உலகியல் வழக்கு எனப்படும். அவ்வுலகியல் வழக்கில் சிறந்தனவாயுள்ளவற்றை அறிஞர்கள் தேர்ந்தெடுத்துப் பிற்கால மக்களின் உலகியல் வழக்குத் திருத்தமுறச் செவ்வையாக நடைபெறுதற் பொருட்டுப் பாடல்களாகப் பாடி வைப்பர், அப்பாடல் உலகியல் வழக்கின் உயர்வு தோன்றுமாறு பலபடப் புனைந்து செய்யப்பெறும், தொல்காப்பியரும் இதனை, - வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான." என்று கூறுவர். இதற்குப் பேராசிரியர், “வழக்கென்று சொல்லப் படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே என்னை? உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின்' என்று பொருள் கூறுவர். எனவே, இத்தகைய பாடல்களாகிய நூல் வழக்கு நாடக வழக்கு எனப்படும். உலகியல் வழக்கும் நாடக வழக்கும் சேர்ந்ததே, அகப் பொருட் புலனெறி வழக்கம் அல்லது செய்யுள் வழக்கம் ஆகும். இதனை ஆசிரியர் தொல் காப்பியனார், . நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்." |புலன் நெறி வழக்கம் - நூல் நெறி வழக்கம்) என்று கூறுவர். இதற்கு இளம்பூரணர் தரும் விளக்கம்: 'நாடக வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் ஒரிடத்து வந்தன வாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது, செல்வத்தானும், குலத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்தார் இருவ ராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ் வழிக் கொடுப்போருமின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதி யாற் புணர்ந்தார் எனவும் பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையால் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந் நிகரணவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தன மரபியல்-94, இளம்) அகத்திணை - 56 (இளம்) 3.2