பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/444

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


426 அகத்திணைப் பாடல்கள் களைக் கோவைபடக் கூறாமல் சென்றதையும், பழைய இலக்கியங் சளும் அதற்கேற்பக் காணப்பெறுவதையும் நோக்கும்போது, பண்டைக் காலத்தில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணையில் ஒரு முறைபற்றிப் பாடுதலே பெருவழக்காக இருந்த தென்பதை ஊகித்து அறியலாம். எனினும், நுணுகி ஆராய்ந்தால் தொல்காப்பியத்திலுள்ள அகப்பொருள் முறை வைப்பினை இன்ன தென்பதை நன்கு அறிந்து கொள்ளலாம். இதற்குத் தொல்காப்பியர் கருத்துகளையே பெரும்பான்மை தழுவியமைந்த இறையனார் களவியலுரையும் நம்பியகப் பொருளும் பெரிதும் துணை செய்யும். முறைப் பெயர்கள் : அகத்திணைப் பாடல்களில் வரும் கூற்றுகளில் தனி ஆண் பெண் பெயரிட்டு வழங்குதல் இல்லை என்பதைப் பிறிதோரிடத்தில் விளக்கியுள்ளோம்.’’ இப்பாடல் களில் முறைப்பெயர்களைக் கொண்டே கூற்றுகள் நிகழும். அவை தம்பி, தம்முன் என்பனவும்: கிழவன், தோழன் என்பனவுமாகும். முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குறி மரபின் இருவீற்றும் உரித்தே ’’ என்பது விதி. தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகிய நால்வரும் ஒருவரையொருவர் அழைத்தற்குரிய பொதுப் பெயர் "எல்லா என்பது. இச்சொல்லால் தலைவியும் தோழியும் பெரும் பான்மை தலைவனையும், அத்தலைவன் சிறுபான்மை தலைவி யையும் பாங்கனையும் அழைத்துக் கொள்வர் என்று நச்சினார்க் கினியர் குறிப்பர்; சில எடுத்துக்காட்டுகள்: - எல்லா தமக்கினி தென்று வலிதில் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ’’’ இது தலைவி தலைவனை நோக்கிக் கூறியது; இஃது ஆண்பால் மேல் வந்தது. "முற்றிழை யேஏர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான்; எல்லாநீ 21. நாலைந்திணைப் பாடல்களின் வைப்புமுறை இங்ஙனம் ஊகிக்க இடம் தருகின்றது. 22. அகத்திண்ை மர்ந்தர் -v ஆம் பகுதி காண்க. (பக். 310). 23. பொருளியல் - 26(நச்) 24. கலி - 62 (5-8)