பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/445

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகத்திணைப் பாடல்கள் - 427 பெற்றேம்யாம் என்று பிறர்செய்த இல்லிருப்பாய் கற்ற தில்லைமன்ற காண் என்றேன்; முற்றிழாய்! தாதுசூழ் கூந்தல் தகைபெறத் தைஇய x கோதை புனைகோ நினக்கு என்றான்; எல்லாநீ ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன்."" என்று உரையாடல் முறையில் அமைந்த இம்முல்லைக் கலியில் வந்துள்ள எல்லா இருமுறையும் தலைவி தலைவனை நோக்கி விளித்ததே யாகும்; ஆகவே ஆண்பால்மேல் வந்ததாகும். எல்லா இஃதொத்தன் என்பெறான் கேட்டைக்காண்" என்ற குறிஞ்சிக் கலியடியில் தோழி தலைவியை விளித்தது. இது பெண்பால்மேல் வந்தது. 'அதிர்வில் படிறெருக்கி வந்தென் மண்மேல் முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி உதிர்துகள் உக்கநின் ஆடை யொலிப்ப எதிர்வளி நின்றாய்நீ செல்; இனியெல்லா' [படிறு - வஞ்சனை: எருக்கி - வருத்தி; ஏதிலாள்-பரத்தை; முச்சி - முடி; வளி - காற்று) இது தலைவியைத் தலைவன் விளித்தது. எனவே, பெண் பால் மேல் வந்தது. எல்லா என்ற சொல் எலா', 'எல்ல', 'எலுவ எனவும் திரிந்து வழங்கும். "எலுவ சிறா அர்' “யாரை எலுவ யாரே' என்ற இடங்களில் தலைவனைத் தோழி விளித்தமை ← fᏑ☾ᎢᏜᏋ . - r மேலும், அன்னை', 'என்னை என்ற முறைப் பெயர்களும் இப்புலனெறி வழக்கில் வழங்கும். அன்னை என்பது தலைவி தோழியையும், தோழி, தலைவியையும் அழைக்கும் சொல்லாகவும் "என்னை என்பது அவ்விருவரும் தலைவனை விளிக்கும் சொல்லா கவும் வழங்கப்பெறும். 25. டிெ - 111 (9.16) 26. டிெ - 61 அடி. 1 27. கலி-81. வரி (29-33) 28. குறுந்- 129. 29. நற். 395,