பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/447

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகத்திணைப் பாடல்கள் 4.29 பொருளற்ற உணர்ச்சி ஒலிகளையே இசைத்து மிக்க இன்பங் கண்ட மனிதன் மெல்ல மெல்ல மாறிப் பொருள் ஒலிகளை மிகுதி யாக இசைத்து இன்பம் காணத் தொடங்கினான் பறவைகளைப் போல் உணர்ச்சி ஒலிகளை மிகுதியாக இசைத்த காலத்தில் அவனுடைய செவிப்புலன் வாயிலாக உள்ளம் குழைந்து இன்புற் றான். இம்மாறுதல் நேர்ந்த பிறகு, பொருள் ஒலிகளை மிகுதி யாக இசைத்துப் பயின்றபோது, செவிப்புலன் வாயிலாக மட்டும் அல்லாமல், அறிவின் வாயிலாகவும் உள்ளம் குழைந்து இன்புற் றான். இன்னும் கூறப் புகுந்தால், செவிப்புலன் வாயிலாகப் புகுந்த இன்பம் குறைந்து அறிவின் வாயிலாகப் பெறும் இன்பம் மிகுந்தது எனலாம். இந்த நிலையில், பாட்டு என்னும் கலை, உணர்ச்சி ஒலிகளின் துணையையும் கடந்து, இசைக் கருவிகளின் துணையையும் வாழவல்லதாய் விளங்கிற்று. ‘பாட்டு’ (Poetry) என்னும் உயர்கலை பிறந்த நிலை இதுவே ஆகும்' இத் தகைய ஒரு நிலையில் இன்ப உணர்ச்சியைப் புலப்படுத்தும் அகப் பாடல்கள் எழுந்திருக்கலாம். இசையின்பம் மிக்க கலிப்பாட்டும் பரிபாடலும் ஆதியில் அகப்பொருள் பாடலின் யாப்பு முறைகளாக அமைந்தன என்று தொல்காப்பியர் குறிப்பிடுவர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்' என்ற விதியால் இதனை நன்கு அறியலாம். மேலும் ஆசிரியர் பரி பாடலின் உறுப்புகளைக் குறிப்பிடும்பொழுது, காமங் கண்ணிய நிலைமைத் தாகும்’ - என்று கூறுவதாலும் பரிபாடல் இன்பப் பகுதிபற்றியே பாடப் பெற்றது என்பதை உணரலாம். இதனால், ஆசிரியர் தொல் காப்பியர் காலத்தில் எல்லாப் பாக்களிலும் அகப்பொருள் அதிக மாக வழங்கப்பெறாமை அறியப்படும். ஆனால், தொல்காப்பி யருக்குப் பின்னருள்ள காலத்தில் இவ்வரையறை இல்லாமல் போய் விட்டது. கடைச் சங்க நூல்களில் கலிப்பாட்டு நீங்க ஒழிந்தவும் பிற்பட்ட நூல்களும் ஆசிரியம், வெண்பா, வஞ்சிப் 37. மு. வ: இலக்கிய ஆராய்ச்சி பக் 113-114 38. அகத்திணை-56 (இளம்) 39. செய்யு-117 (இளம்)