பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/448

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


430 அகத்திணைக் கொள்கைகள் பாக்களில் அமைக்கப்பெற்றிருப்பதால் இதனை உணரலாம். நச்சினார்க்கினியரும் நாடக வழக்கினும் என்று மேற்குறிப் பிட்ட நூற்பாவின் உரையில் பிற்காலத்தில் நேர்ந்த மாறு பாட்டை, “ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புறம் என்னும் இரண்டிற்கும் பொதுவாய் வருமாறு நெடுந்தொகையும் புறமும் கீழ்க்கணக்கும் மதுரைக் காஞ்சியும் பட்டினப் பாலையும் என்பனவற்றுட் காண்க' என்று உரையிற் கொண்டு அமைப்பர்? 40. அகத்திணை.53 (நச்) உரை.