பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/449

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல-27 a உரிப் பொருன் ஒன்றே நுவலும் பாடல்கள் அகத்தினைப் பாடல்கள் நீளமாக அமைந்தால்தான் முதல் கருப்பொருள்கள் அமைவதற்கு இடம் தரும். திருக்குறள் - காமத்துப்பால் மிகச் சிறிய இரண்டடிகளால் அகப்பொருளைச் சுருக்கமாகத் தெரிவிக்கும். இச்சிறு வெண்பாக்கள் முதல் கருப் பொருள்களைச் சிறிது புனையவும் இடந்தாரா. ஆதலின் திருவள்ளுவர் உரிப்பொருளே பொருளாகக் காமத்துப்பாலை இயற்றியுள்ளார். அகப்பாட்டின் அடி நீள நீள இயற்கைப் புனைவுக்கு இடமுண்டு. கண்ணொடு கண்ணினை நோக்கின் வாய்ச்சொற்கள் - என்ன பயனும் இல!" கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள." என்ற குறட்பாக்கள் தெளிவுறுத்தும். அடி சுருங்கின் அப்புனைவு சுருங்கிவிடும். பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து.' நீரும் நிழல தினிதே புலவியும் விழுநர் கண்ணே இனிது" என்ற அடிகளால் இதனைத் தெளியலாம். ஐங்குறுநூற்றுப் பாக்கள் 3-6 அடி எல்லையைக் கொண்டவை. இவ்வடிச் சிறுமை யால் இந்நூலும் குறுந்தொகை போல உரிப்பொருளையே சிறப்பாகப் பாடுகின்றது. எனினும், குறுந்தொகை நல்கும் இலக்கியச் சுவைக்கு இந்நூல் தரும் சுவை ஈடாகாது என்றே 1. குறள்-1100 2. டிெ-1101 3. டிெ-1102 4. டிெ-1309