பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 அகத்திணைக் கொள்கைகள் உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள் நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர் நலனுண்டு துறத்தி யாயின் மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே" (உழுந்து-உழுத்தங் காய் கழுந்து-தடி கரும்புஉடை கருப்பெழுதிய பணை-பருத்த:தொடி-வளையல்; மகளிர். பரத்தையர்) பரத்தையரிடமிருந்து திரும்பிய தலைவன் அங்கு அவர் யாரையும் அறியேன்” என்று சூள் செய்தான். நீ இங்ஙனமே பரத்தையர்மாட்டும் சூள்செய்து அவர் நலம் நுகர்ந்து இப் பொழுது பிரிந்தாய். அவ்வியல்பே ஈண்டும் நின்பால் உள்ள தாதலின் நின் சூள் ஏற்கத்தகுவதன்று' என்று தோழி கூறி வாயில் மறுப்பதாக அமைந்தது இப்பாடல். சங்க இலக்கியத்தில் உரிப் பொருளையே துவலும் பாடல்கள் நல்கும் இன்பம் சிறப்புடையது. இயற்கை யழகையே கொண்டு செயற்கைப் புனைவு யாதுமின்றித் திகழும் நங்கையை யொத்தன இத்தகைய பாடல்கள். படித்துத் துய்ப்போருக்கு இவை நல்கும் இன்பம் தனிச் சிறப்புடையது; தாமரைக் கண்ணான் உலகில் பெறும் இன்பத்தை யொத்தது. அகப்பொருளின் பெருமை : கைக்கிளை ஐந்திணை, பெருந் திணை என்ற ஏழு திணைகளையும்பற்றிப் புலவர்கள் பாடி வந்த வழக்கம் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்டே பெருகி யிருத்தல் வேண்டும். இதனை, முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி புலந்தொகுத் தோன் என்ற தொல்காப்பியப் பாயிரப் பகுதியால் வலியுறும். அங்ங்ணமே தொல்காப்பியருக்குப் பிற்பட்ட காலத்திலும் அவரிட்ட ஆணை வழியே நூல்கள் யாக்கப்பெற்றுப் பெருகி இருந்தன. எட்டுத் தொகை நூல்களுள் புறநானூறும் பதிற்றுப் பத்தும் ஒழிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு ஆகிய ஏனைய ஆறும், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் திருக்குறள் (காமத்துப் பால்), கார் நாற்பது, 15. டிெ.384