பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/455

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிப்பொருள் ஒன்றே நுவலும் பாடல்கள் - 437 ஜந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற் ைைம்பது திணைமொழி ஐம்பது, கைந்நிலை ஆகிய ஏழும், பத்துப் பாட்டில் முல்லைப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல் வாடை ஆகிய நான்கும் அகத்திணைபற்றி அமைந்த நூல்களேயாகும். இவற்றுள் நற்றிணை முதலிய தொகை நூல்கள் பல புலவர்களால் பாடப்பெற்றவை. அஃதாவது, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு திணை, துறை விகற்பங்கள்பற்றிப் புலவர்கள் பாடிப் போந்த செய்யுட்கள் பிற்காலத்தொருவரால் தொகுக்கப் பெற்று முறைப்படி கோக்கப் பெற்றன. இங்ஙனம் அகப்பொருளைப் பொருளாகக் கொண்டு தம்மை ஆதரித்த அரசர் செல்வர் முதலியவர்களைப் பாட்டுடைத் தலைவராக்கிப் பாடுப் வழக்கு முன்னாளில் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப் பெற்று வந்தது." ஒவ்வொரு திணையின் முதல் கரு, உரிப் பொருள்களின் இயற்கைச் சிறப்புகளை எடுத்து விளக்கி அழகாகப் பாடி வந்த அருமைபற்றிப் பண்டைப் புலவர்களில் சிலர் பாலை பாடிய பெருங் கடுங்கோ, பாலைக் கெளதமனார் மருதனிள நாகனார், நெய்தற் கார்க்கியன், வெறிபாடிய காமக் கண்ணியார், மடல் பாடிய மாதங்கீரன் என்று அகத்திணை துறைப் பெயர்களால் சிறப்பித்து வழங்கப்பெறுவாராயினர். மேலும், பண்டைக் காலத்தில் பொருளிலக்கணத்தை அறிந் திராமை பெரியதோர் இழுக்காகவும் கருதப்பெற்று வந்தது. கடைச்சங்க நாளில் ஒரு காலத்தே பொருளிலக்கண மறிந்த புலவர் கிடைக்காமையால் பாண்டியன் புடைபடக் கவன்றபோது, “என்னை? எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமே எனின், இவை பெற்றும் பெற்றிலேம்' என அவ்வரசன் கூறினதாகவுள்ள வரலாற்றால் இதனை அறியலாம்.' அன்றியும், இறையனார் கண்ட பொருளிலக்கணத்திற்குப் புலவரைக் கொண்டு பொரு ளறிந்த வரலாறு பொருளாராய்ச்சியில் முன்னோர்க் கிருந்த ஊக்க மிகுதியைப் புலப்படுத்தும், பொருளதிகாரத்தில் கூறப் பெறும் செய்தி தமிழ் மொழிக்கே சிறப்புடையது. இதன் பொருட்டே ஆரிய அரசன் பிரகத்தனும் தமிழறிய விரும்பினான். 16. இம்முறை பிற்காலத்தில் (அண்மைக் காலத்தில்) சிற்றிலக்கியங்கள்ாக வ்டிவெடுக்கும் பொழுது சில நூல் . கள் நாகரிகமற்ற முறையில் மிகவும் கீழ்த்தரமாகப் பாடப் பெற்றுள்ளன. 17. இறை-கள. 1 இன் உரை.