பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/457

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை நாடகக் காட்சிகள் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்." இந்த தொல்காப்பிய நூற்பாவில் நாடக வழக்கு என்பதற்கு இளம்பூரணர்கூறும் உரைசிந்தித்தற்குரியது அவர்கூறுவது:"நாடக வழக்காவது,சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வருவனவாகத் தொகுத்துக் கூறுதல், அஃதாவது செல்வத்தானும், குலத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப் போருமின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரணவாகிச் சுவைபட வருவன வெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல்’ என்பது. சாதாரணமாகக் கூத்து அல்லது நாடகம் நடை பெற வேண்டுமாயின் அரங்கு ஒன்று அமைக்கப் பெறுதலும், அதன்கண் பன்னிறத் திரைகளும் வீழ்த்தப்பெறுதலும், அந்த ஆடரங்கில் தோன்றும் நாடகமாந்தர் பல்வேறு வேடந் தாங்கித் தோன்று தலும், அவர்கள் ஒருவருக் கொருவர் கூற்றும் மாற்றமுமாய் (வினாவும் விடையுமாய்) உரையாடல் நிகழ்த்தி அந் நாடகத்தைக் காண்போர் உள்ளத்தில் நகை முதலிய எண்வகைச் சுவைகளையும் தோற்றுவித்து அவர்களை மகிழ்விக்கின்றனர் என்பதையும் நாம் நன்கு அறிவோம். இங்ஙனம் நாடகப் புலவர்கள் பருப் பொருள் களால் அமைத்துக் கொள்ளும் உத்தி முறைகளையே இயற்றமிழ்ப் புலவர்கள் தமது செய்யுளில் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் 1. அகத்திணை - நூற். 56 (இளம்) 2. அகத்திணை 56 (உரை)