பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/458

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


440 அகத்திணைக் கொள்கைகள் தமது செவ்விய மதுரஞ் சேர்ந்த தீஞ்சொற்களால் முதற் பொருள்: கருப்பொருள் என்ற திணைக்கு உரிய பொருள்களால் இடமும் காலமுமாகிய களத்தினைப் படைத்துக் கொள்ளுகின்றனர். இத் தகைய கற்பனை அரங்கின்கண் தம் கற்பனையிற் பிறத்த தலைவன் தலைவி தோழி செவிலி முதலிய உறுப்பினர்களைக் கொண்டுவந்து தம் பாடல்களை ஒதுவோர் அகக்கண் முன்னர்க் கண்கூடாகக் கொண்டுவந்து நிறுத்துகின்றனர். இந்தக் கற்பனை நாடகத்தில் புலவர் சில சமயம் தன் கூற்றாலும் பெரும்பாலும் நாடக மாந்தர்களின் கூற்றாலும் உரையாடல்களை நிகழ்வித்து அழகிய மானதக் காட்சி நாடகங்களை நிகழச் செய்கின்றனர். இத்தகையநாடகங்களை ஒதுவோரின்அகக்கண்முன் காட்டலையே தொல்காப்பியர் நாடக வழக்கம்’ என்று குறிப்பிட்டனர் என்று கோடலாலும் இழுக்கொன்று மில்லை. - நாடக அரங்கில் நாடக மாந்தர்கள் கூற்றும் மாற்றமுமாக உரையாடல் நிக்ழ்த்துவதற்கு ஏனைய பாடல்களிலும் கலிப்பாவும் பரிபாடலுமே சாலத் தகுதியுடையன என்பதற்குக் காரணமும் உண்டு. இந்த இரண்டு பாடல்களிலும் தரவு தாழிசை கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து, சொற்சீரடி முருகியலடி போன்ற செய்யுள் உறுப்புகள் எல்லாம் அமைந்திருப்பதால் இயற்றமிழ்ப் புலவர்கள் தாம் படைக்கும் கற்பனை நாடக மாந்தர்களின் உரையாடல்களை இயல்பாகவும் எளிதாகவும் அமைத்தற்கு வாய்ப்பாக உதவுகின்றன. இனி, இத்தகைய கற்பனை நாடகக் காட்சிகள் அகப்பொருள் இயற்றமிழில் அமைந்திருக்கும் அருமைப் பாட்டினைப் புலவர்களின் சொற் களாலும் நம் சொற்களாலும் ஒன்றிரண்டு காட்டுவோம். காட்சி-1 காலம் : வைகறை இடம்: மருத நிலத்தில் அமைந்த தலைவனின் மாளிகை. உறுப்பினர் : தலைவன், தலைவி, தோழி. நிகழ்ச்சி : பரத்தையர் இல்லம் புகுந்த தலைவன் சின்னாள் கழித்துப் பரத்தையர் சேரியினின்றும் திரும்பித் தன் இல்லம் புகுகின்றான். தலைவியை நெருங்கி (அச்சங் கலந்த) அன் புடன் அவள் கூந்தலைப் பற்றுகின்றான்.