பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/461

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகத்தினை நாடகக் காட்சிகள் 443 ஆ.மகள் : நெஞ்சேவல் செய்யா தெனநின்றாய்க்(கு) எஞ்சிய காதல்கொள் காமம் கலக்குற ஏதிலார் பொய்ம்மொழி தேறுவது என். ஆ-மகன் : தெளிந்தேன் தெரியிழாய்! யான். ஆ.மகள் : பல்கால்யாம் கான்யாற்(று) அவிர்மணல் தண்பொழில் அல்கல் அகலறை ஆயமொடு - முல்லை குருந்தொடும் உச்சிவேய்ந்(து) எல்லை இரவுற்ற(து); இன்னம் கழிப்பின் அரவுற்றுருமின் அதிரும் குரல்போல் பொருமுரண் நல்லேறு நாகுடன் நின்றன பல்லான் இனநிரை நாமுடன் செலற்கே" (நந்துதல்-பெருகுதல்; அமர்தல்-விரும்புதல்; உறிஇ-உற்று: ஏமம்-பித்து, அது ஏம்’ எனக் குறைந்து நின்றது; வருவான்: வினையெச்சம்: விடு-இப்பொழுது என்னைப் போக விடு; எஞ்சிய காதல் கொள் காமம்-எஞ்சிய காமம், காதல் கொள் காமம் எனத் தனி தனி இயையும். எஞ்சிய காமம்-மிக்குச் செல்லும் காமம்; காதல் கொள் காமம். அன்பொடு கலந்த காமம்; எல்லை-பகல்; அரவுற்று-அரவு உற பாம்புவரக் கண்டு) கலிப்பாவிலும் உறழ்கலி என்னும் கலிப்பா ஒருவரோடொரு வர் சொல்லாடல் நிகழ்த்துவதற்கென்றே இயன்றதொரு பாட லாகவே அமைந்துள்ளது. மேற் காட்டிய இரண்டு காட்சிகளும் உறழ்கலியாலே அமைந்திருத்தல் நோக்கற்பாலது. 4. முல்லைக் கவி-13. (இது தரவும், இரண்டு அடியால் இரண்டு கொச்சகமும், தனிச்சொல்லும், குறுவெண் பாட்டும், தனிச் சொல்லும், ஒரடியால் இரண்டும், தனிச்சொல்லும், நெடுவெண்பாட்டும், குறுவெண் பாட்டும், சிந்தடி ஒரடியான் ஒன்றும், சொற்சீரடியும், ஐஞசீரும் வந்து போக்கு இலக்கணமில்லாத ஆசிரியச் சுரிதகமும் பெற்ற உறழ் கலி.)