பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை நாடகக் காட்சிகள் 445 தோழி : இன்னும் உண்மை விளங்கவில்லை போலும் ஆயர் மகனையும் நீ மையல் கொள்ளுகின்றாய். தாயையும் கண்டு அஞ்சுகின்றாய். அப்படியாயின், நீ கொண்ட காம நோய்க்கு மருந்தில்லை காண்! ஆ.ம : ஏடி, யானுற்ற வருத்தத்திற்கு மருந்தில்லையேல், வருந்துவதைத் தவிர என் செய்வேன்? தோழி : வருந்தற்க தலைவன் கண்ணிச் செய்தியைப் பிறர் கூற அன்னை அறிந்து, நின் தந்தையோடும் தமையன் மாரோடும் கலந்தாய்ந்து திருமால் இவளுக்கு ஒரு மணாளனைத் தந்தான் என மகிழ்ந்து, களவொழுக்கம் பிறர் அறியாமற் காக்கும் பொதுதற்கு உன்னைக் கொடுக்கத் துணிந்தாள். காட்சி 4 காலம் : மாலை. இடம் : முல்லை நிலத்தில் பலரும் திரிதரும் மன்றம். உறுப்பினர் : ஆயர் மகன், ஆயர் மகள். நிகழ்ச்சி : வெண்ணெய் விற்கச் செல்லுகின்றாள் ஆயர் மகள் ஒருத்தி, வேறோர் அலுவலாகச் சென்ற ஆயர் மகன் ஒருவன் அவளைப் பலரும் திரிதரும் மன்றத்தில் சந்திக்கின்றான். அவளை மெய் தீண்டித் தன் ஆற்றாமையை அறிவிக்கின்றான். அவள் அதற்குத் தக்க மாற்றம் உரைக்கின்றாள்." தலைவி ஏடா, குறும்பிடத்தே யுள்ள ஆட்டிடையரின் குடிதோறுமுள்ள மகளிரை விரும்புகின்றனை. தேள் கடுப்புத் தீர அப்பொழுதே இட்டுத் தீர்க்கும் மருந்துபோல நினது காம வேட்கை தோன்றியபொழுதே தீரக் கூடிய மருந்தினை எதிர் பார்க்கின்றனையா? இஃது இயலுவ தொன்றா? அல்லவே. நின்னோடு ஒரு நகை செய்தலைக் குறித்து நீ மெய்யைத் தீண்டுதற்கு இடம் தந்தேன். நீயோ என்னைப் புணர்ச்சிக்கும் எளியளெனக் கொண்டாய். மோரை வேண்டினார்க்குச் சிறிது மோரை வார்த்து எளியளானால், வெண்ணெய் வேண்டினும் அது கொடுத்து எளியளாவள் எனக் கருதுவதற்குத் தகுதியோ? 6. டிெ-10. -