பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 அகத்திணைக் கொள்கைகள் தலைவன் : ஒண்ணுதால், நீயோ கூட்டத்தை மறுக்கின்றாய். அது வேண்டா. யானும் இதோ நின்னை விட்டு நீங்குவேன். ஒன்று கூறுவேன். ஆய்மகள் மத்தைச் சுற்றிய கயிறு போல நின் நலத்தையே சூழ்ந்து சுழன்று திரிகின்றது என் நெஞ்சம், நீ என்னிடத்துக் கூறிய சொற்கள் அச்சத்தை விளைவிக் கின்றன. அதனால் என் நெஞ்சு உன்னிடத்தினின்றும் மீள்கின்றது; பின்னர் நிலை பெறாது நிற்கின்றது. மீட்டும் புறப்பட்டுத் தடுமாறுகின்றது. தலையீற்றுப் பசு பொழுது விடிந்த பின்னரும் மேய்புலம் செல்லாது தொழுவிற் கட்டிய தன் கன்றினையே நினைந்து நினைந்து சூழ்வதைக் கண்டாயன்றோ? அதுபோலவே யானும் உள்ளேன். இஃது என் நிலையாகும். என்னிடத்து எந்நாளும் வருத்தம் மிக்கது. என் உயிர் பாலில் மருந்திட்டு வெண்ணெய் கடைந்தெடுத்த பால் நுகர்வார்க்குச் சிறிதும் பயன் தராதவாறு போலக் கைசென்று தோய்ந்து விடுகின்ற அளவாய் விட்டது. செய்வ தின்னதென்று அறியாது தடுமாறுகின்றேன். லைவி : ஒகோ, நீ அத்தன்மை யுடையாயோ? ஆயின் செய்தி யொன்று கூறுவேன். இது பலரும் திரிதரும் மன்றம். எதிர்ப் பட்ட அப்பொழுதே மன அமைதி குலைந்து, மன அமைதி மிக்குடையார் மகளிரைப் புனரேனேல், உயிர் வாழேன்' என்கின்றாய். இனி, நீ இவ்விடத்தில் நிற்றலும் தீது. சுற்றத்தார் காண்பர். இன்றுபோல் நாளைக்கும் புலத்திற்குக் கன்றுகளை ஒட்டிச் செல்வேன். ஆண்டு வந்து இவையெல்லாம் சொல்க. ஈண்டு இனி நில்லாதே, செல்க. இடம் அது. (இவ்வாறு குறியிடம் அமைக்கின்றாள் ஆய்மகள்) கத - - t காட்சி-5 காலம் : மாலை. இடம் : மலையருகில் ஒரு பாறை. - உறுப்பினர் : தலைவி, தோழி, பகற்குறியை நாடிவரும் தலைவன் (சிறைப் புறமாக ஒதுங்கி நிற்றல்). நிகழ்ச்சி தலைவியும் தோழியும் பாறையாகிய உரலில் மூங்கில் நெல்லையிட்டு யானைக் கோட்டாலாகிய உலக்கையால் குற்றிக் கொண்டே வள்ளைப் பாட்டொன்றைப் பாடு கின்றனர். தலைவி தலைவனை இயற்பழித்தலும் தோழி