பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/468

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


450 அகத்திணைக் கொள்கைகள் காட்சி-7 இடம் : மலைச்சாரல், காலம்: நள்ளிரவு. உறுப்பினர்: தலைவி, தோழி, தலைவன். சூழ்நிலை: இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறமாக இருக் கின்றான். மணம் செய்து கொள்ளும் கருத்தின்றி இருப்பவன் இவன். இவனை வரைவுடம் படுத்தற்குத் தலைவியும் தோழி யும் செய்த சூழ்ச்சியே நாடகத்தின் சூழ்நிலையாகும். தோறு யும் தலைவியும் படப்பையினுாடு சொல்லாடி நிற்றவைத் தலைவன் காண்கின்றான். தன் வரவை அவர்கள் அறியா வண்ணம் வேலியின் பக்கத்தே மறைந்து நின்று ஒற்றிக்கேட் கின்றான். ஆயினும் அம்மகளிர் அவன் சேய்மையில் வரும் பொழுதே அறிந்து கொண்டுவிட்டனர்; அறியாதவர் போலவே நடிக்கின்றனர். தலைவன் கேட்கும் அளவில் அவர் களிடம் பேச்சு நடைபெறுகின்றது. அப்பேச்சு வருமாறு:19 தோழி: (தலைவியை நோக்கி) அன்பே, இக்கூதிர்காலத்து நள்ளிரவு எத்துணை அச்சுறுத்துகின்றது. முன்னொரு நாள் களிறும் புலியும் தம்முள் போரிட்ட ஆரவாரங்கேட்டு நம் உள்ளம் கலங்கினதன்றோ? அப்போரில் களிறு தன் கூரிய கோட்டால் புலியைக் குத்திக் கொன்றிருக்கும். தலைவி: உண்மையே; நானும் அப்படித்தான் எண்ணினேன். புவியின் குரல் அவிந்து களிறுமட்டிலுமே நீண்ட நேரம் பிளிறி நின்றது. யானையின் கொம்பு புலியின் குருதியில் தோய்ந்து கறையுற்றிருக்கும் அன்றோ? - தோழி: கறையுற்றால் என்ன? யானைகள் அருவி நீரில் ஆடுவதில் மிகவும் விருப்புடையவை. கூர்ந்து கேட்பாயாக. தீண்டி வருத்தும் தெய்வங்கள் உறையும் அந்த நெடிய குவட்டை யுடைய மலையினின்றும் வீழ்கின்ற பேரருவியின் முழக்கம் எத்துணை ஆரவாரமாக முழங்குகின்றது! அருவியில் நீராடும் யானையின் நுதலையும் கொம்புகளையும் அருவிநீர் கழுவி விட்டிருக்கும். 10. அகம்-272