பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/472

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


454 அகத்திணைக் கொள்கைகள் கோட்டை நோக்கி அத்தினையைத் தூவி நீரைத் தெளித் தனள். பின்னர் நீர்க்கலத்தை நிலத்தில் வைத்துவிட்டு, முருகவேள் எழுந்தருளியிருக்கும் அத்திசையை நோக்கி “முருகா, முருகா' என்று மெல்லப் பன்முறை ஒலித்து வாழ்த்துப் பாடல் பாடியவண்ணம் நெடுநேரம் நின்றனள், தலைவி : (புன்முறுவலுடன்) அன்பே, நம் பெருமானின் தோற் றமும் அப்படித்தானே அமைந்துள்ளது? அன்னை அவ்வாறு நினைப்பது இயல்புதான். ஒருவாறு உய்ந்தேன்! தோழி : அங்ஙனம் உவப்பது பிழை. ஒரு பொழுதைக்குப் பிழைத் தேன் என்று சொல். தலைவி : ஏன்? மீண்டும் அச்சுறுத்துகின்றாய்? தோழி : ஆம்; அஞ்சத் தான் வேண்டும். நீயோ நம் பெருமானைக் கண்டவுடன் பேரழகுடன் பொலிகின்றாய். அவனைப் பிரிந் திருக்கும் பகற்பொழுதில் உள்ளமும் உடலும் மெலிந்து வேறொருத்திபோல் மாறிக் காணப்படுகின்றாய். உன் மெலிவு கண்டு வாட்டமுற்ற அன்னை துயில் துறந்து இரவெல் லாம் நம் இல்லத்தைச் சுற்றி வந்த வண்ணம் உள்ளாள் என்பது இந்நிகழ்ச்சியால் தெரியவில்லையா? பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடாமலா போய் விடுவான்? தலைவி அதோ முன்றில் அருகில் ஏதோ காலடியரவம் கேட் கின்றது. நம் பெருமானும் ஏனோ இன்னும் வந்ததிலன்? தோழி : ஆம்; அன்னை வந்தாலும் வரக் கூடும். யாம் இனி வீட்டினுள்ளே போய்விட வேண்டியதுதான். இருவரும் இல்லத்துட் புகுந்து மறைகின்றனர். - (காட்சி முடிகின்றது) மேலும், நல்லுருத்திரனார்பற்றிக் கூறும் இடத்தில் நாடகப் பாங்கில் அமைந்த உரையாடல் காட்டப் பெற்றுள்ளன. ஆண்டுக் கண்டு தெளிக. - 11. இயல் - 32.