பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/475

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள்ளுறை உவமம் 457 இளமையும் அழகும் கெட்டுப் பேய்போல் விளங்குகின்றேன் என்று என்னை இகழ்ந்து சென்ற நீ இப்போது என்னை விரும்பி வந்து தழுவினால், பரத்தையரால் கோலம் செய்யப்பெற்ற நின் அழகிய மார்பு பொலி விழந்து போகுமே! ஆதலின் என்னை முயங்கற்க’ என்று கூறுகின்றாள். தலைவனது ஊரின் கருப்பொருளால் உள்ளுறையமைத்துத் தன் வெறுப்புள்ளமும் துன்பமும் ஒருங்கே புலனாகும்படி கூறியிருக்கும் ஓரம்போகியாரின் திறன் கற்போருள் ளத்தை மிகவும் கவரும் தன்மையது என்பது பெறப்படும். உள்ளுறை அமைக்கும் முறை : அகப்பாடல்களைப் புனை யும் கவிஞர்கள் உள்ளுறை உவமையைஅமைக்கும் போது அந்தந்த நாட்டிலுள்ள கருப்பொருள்கள் வருமாறு அதனை அமைப்பர். கேட்போருக்கு அப்பொருள்களின் தன்மைகளை வெளிப்படை யாக எடுத்து வருணித்து உரைப்பதுபோல் தோன்றும். ஆனால், அப்படிச் செய்யும்பொழுது வருணனையின் உள்ளே அடிப்படை யாக வேறொரு கருத்து உறைந்திருக்கும். வருணனையில் வரும் பொருள்கள் அவற்றுக்கு ஒப்பான ஒவ்வொரு கருத்தை அறிவ தற்குப் பயன்படும் உவமைபோல் இருக்கும். இவ்வாறு உள்ளுறை உவமத்தில் வரும் பொருள்களைக் கொண்டு வேறு ஒரு பொருளைக் கருத முடிவதால் இலக்கண ஆசிரியர்கள் உளளுறை உவமையை உவமப் போலி என்று மற்றொரு பெயராலும் குறிப் பிடுவர். - மேற்காட்டிய கரும்புடு நடு பாத்தியில்' என்ற பாடலில் தலைவியின் பேச்சில் கரும்பு, ஆம்பல் போன்ற மருதநிலத்திலுள்ள கருப்பொருள்களே வந்துள்ளன. குறிஞ்சித் திணைப் பாடலாக இருப்பின் இதில் வாழை, பலா, தேன், சந்தன மரம் போன்ற குறிஞ்சிநிலக் கருப்பொருள்களே அமைக்கப்பெற்றிருக்கும் இங்ஙனமே பிற திணைப் பாடல்களில் அந்தந்த நிலத்துக் கருப் பொருள்கள் அமைக்கப்பெறும் என்பது அறியற் பாலது. ஓர் உண்மையும் ஈண்டு உளங்கொளத் தக்கது தமிழர்கள் தெய்வ வழிபாட்டில் சிறந்து தெய்வத்திற்கு முதல் இடம் தந்து வாழ்கின்றவர்களாதலின், இவ்வுலக வாழ்வினையொட்டி வரும் நிகழ்ச்சிகளைக் கூறும் சந்தர்ப்பங்களில் உள்ளுறை உவமையை அமைக்கும்போது கருப் பொருள்களில் தெய்வம் நீங்கலாக ஏனையவற்றை மட்டிலுமே கொண்டனர். தம் வாழ்க்கையுடன் தெய்வத்தைச் சார்த்திப் பேசி அதன் சிறப்பை அவர்கள் குலைக்க