பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/476

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


458 அகத்திணைக் கொள்கைகள் விரும்பவில்லை. இதனை நன்குணர்ந்த தொல்காப்பியனாரும் தாம் நூல் செய்யும்போது இவ்வுள்ளுறையை அமைக்கும் முறையை, உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம்எனக் கொள்ளும் என்ப குறிஅறிந் தோரே." (குறி-இலக்கணம்) என்ற விதியால் குறிப்பிடுவர். உள்ளுறை உவமவகை : தொல்காப்பியர் பொருளதிகாரத்தி லுள்ள உவம இயலில் இவ்வுள்ளுறை உவமங் குறித்து விரிவாகப் பேசுவர். உள்ளுறை உவமம் ஐந்து வகைப்படும் என்று அவர் கூறுவர். உவமப் போலி ஐந்தென மொழிப." என்பது அவர் கூறும் விதி. உரையாசிரியராகிய இளம்பூரணர், “அவையாவன இதற்கு உவமை இல்லை எனவும், இதற்கு இது தானே உவமை எனவும், பல பொருளினும் உளதாகிய உறுப்பு களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு சேர்த்தின் இதற்குவமையாம் எனவும், பல பொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்து வரின் இதற்கு உவமையாம் எனவும், கூடாப் பொருளொடு உவமித்து வருவனவும்' என்று விளக்கம் கூறிச் சான்றுகளையும் காட்டுவர். இந்த ஐந்துவித உள்ளுறை உவமைகளும் வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு என்ற ஐந்தின் ஏதுவாகச் சொல்லப்பெறும் என்பது அவர் கருத்து. இதனை, தவலருஞ் சிறப்பின் தன்மை நாடின் வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப." என்று கூறுகின்றார் என்பது அவர் கொண்ட கொள்கை. 'நினக்கு உவமை இல்லை என்னும் வழிச் செயலானாதல், பயனானாதல், உறுப்பானாதல், உருவானாதல், பிறப்பானாதல் ஒப்பார் இல்லை எனல் வேண்டும் என்பது கருத்து. பிறவும் அன்ன என்று அவர் இதற்குக் கூறும் உரையால் அவர் கருத்தினை அறியலாகும். ஆனால், பேராசிரியர் என்ற உரை 4. அகத்திணை-50 (இளம்) 5. உவ-24 6. டிெ-25