பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/478

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


460 அகத்திணைக் கொள்கைகள் கிழவோட்கு உவமை ஈரிடத்து உரித்தே." என்ற நூற்பாவிற்குப் பொருள் கூறுமிடத்து இங்ஙனம் குறிப் பிடுவர். ஆனால், பேராசிரியர் என்பார் சரிடம் என்பதற்கு 'மருதமும் நெய்தலும் என்று பொருள் கூறி மருதத் திணையிலும் நெய்தல் திணையிலும்தான் தலைவி உள்ளுறை உவமம் கூறு தற்குரியவள் என்று விதந்து ஒதுவர். தலைவன் உவமை கூறுங் கால் தன் தலைமைத் தன்மை தோன்றக் கூறுவான். கிழவோற் காயின் உரனொடு கிளக்கும்.' என்பது தொல்காப்பியரின் விதி. இவனுக்கு எல்லாப் பொருள் களையும் அமைத்துக் கூறும் உரிமையும் உண்டு. கிழவோட் காயின் இடம்வரை வின்றே. * என்ற விதியில் இந்த உரிமையைக் காண்க. அங்ஙனமே, நற்றாய் செவிலி பாணன் முதலியோர் சொல்லுங்கால் இடம் வரையறுக்கப் பெறாது சொல்லுவர். *... ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே" என்று இதற்கு விதியும் வகுத்துள்ளமை அறியப்பெறும். . தலைவியின் வாழ்க்கையில் நேர்முகமாக அதிகத் தொடர்பு கொள்பவர், செவிலியும் தோழியும் ஆவர். தலைவியின் நுண்ணிய பண்புகளையெல்லாம் நன்றாக அறிந்தவர்கள் இவர்களே. எனவே இவர்கள் காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாறு உள்ளுறை உவமம் கூறுவர். தொல்காப்பியர் இதனை, தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற்குரியர் கொள்வழி யான.’’ என்ற விதியால் பெற வைப்பர். இந்த உண்மைகளையெல்லாம் நன்கு மனத்திற் கொண்டு அகப்பொருள் பாடல்களைப் பயின்றால் தான் ஆண்டுக் காணும் உள்ளுறை உவமத்தின் சிறப்பையும் நயத் தையும் நன்கு அறியமுடியும். இனி, எட்டுத்தொகை, பத்துபாட்டு இவற்றிலுள்ள அகப்பொருள் நூல்களிலுள்ள சில உள்ளுறை உவமைகளைக் கண்டு நுகர்ந்து களிப்போம். -ہیبعہ ہےسبستہ 9. உவம - 31 இளம்) 10. டிெ - 28 (இனம்) 11. டிெ - 32 (இளம்) 12. - 29 13. உவும - 33 (இளம்)