பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 அகத்திணைக் கொள்கைகள் குறிப்பிற் கூறும் தோழியின் நுட்பமான அறவுரை (அறிவுரை!) உணர்ந்து மகிழத் தக்கது. (2) வெள்ளாய் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநட நாரை காணலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும் தண்ணந் துறைவன்' " |குருகு - கொக்கு; காணிய - கண்டு அளாவ: கொட்கும் . சுற்றித் திரியும்) இதில் வெள்ளாங்குருகினைக் கானிய சென்ற நாரை (மீண்டு வந்து) கானலம் பெருந்துறை யினிடத்துத் தன் துணையொடு சுற்றித்திரியும் தண்ணந்துறைவன் என்பது நெய்தல் திணை உள்ளுறை. இதில் வெள்ளாங்குருகு காமக் கிழத்தியாகவும், பிள்ளை' என்றது தலைவனுக்கும் அவளுக்கும் உள்ள ஒழுக்கமாக பும், செத்து' என்றது அவ்வொழுக்கம் இடையறவு பட்டதாக பும், கானிய சென்ற மடநடைநாரை என்றது அவளது ஊடல் தவிர்க்கச் சென்ற வாயில்களாகவும், துணையொடு கொட்கும்: என்றது மீண்டும் தலைவியிடத்து வந்தமையாகவும் கொள்ளும் படி உள்ளுறை உவமத்தால் தோழி தலைமகனுக்கு வாயில் மறுக் கின்றாள். தலைமகன் காமக்கிழத்தி ஒருத்தியிடம் நட்புகொண்டு ஒழு கினான். அவ்வொழுக்கம் யாதோ ஒருகாரணத்தால் இடையறவு பட்டது; அவளது ஊடலைத் தீர்க்க முயன்றும், அது தீராமையால் மீண்டுவந்து தலைவியுடன் அளவளாவ முயல்கின்றான் தோழி வாயில் மறுக்கின்றாள். 'அன்பனே, நீ மெய்யன்பால் ஈண்டு வந்தாய் இல்லை; நின் காமக்கிழத்தி ஊடியதனாலே வந்தனை. நீ ஈண்டு வந்தமையால் அவள் இரட்டைத்தாழ்க் கொளுவி விடுவாள் ஆகவே, ஆண்டுச் சென்று அவள் ஊடலைத் தீர்க்கவே முயலுக. ஈண்டுத் தலைவி நின்பொய்யுரையில் மருளாள் காண்’ என்று வாயில் மறுத்தாளாயிற்று. தோழி அவளால் அறியப்பெற்ற குருகு நாரை ஆகிய நெய்தற் கருப்பொருள்களைக் கொண்டே தொல்காப்பிய விதிபிறழாமல் தன் கருத்தினை வெளிப்படுத்திய தாகச் செய்யுள் யாத்த அம்மூவனார் திறன் அறிந்து மகிழ்வதற் குரியது. 15. டிெ - 158.