பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் 465 மீண்டு வந்து அந்த மாண்பினை நற்றாய்க்குக் கூறி மகிழ்வித்தலே பொருளாக அமைந்தது இது. முல்லைத் திணையின் உரிப் பொருளாகிய இருத்தல் பலவகைப்படும் என்பதை நாம் அறிவோம். அவற்றுள் தலைசிறந்தது இஃதேயாகும். குறுந்தொகையில்: சில உள்ளுறைகளைக் கண்டு மகிழ்வோம். (1) உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூன்முதிர் பேடைக் கீனி லிழை இயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன்' " (குரீஇ-குருவி; சேவல்-ஆண்பறவை; சூல்-கருப்பம்; பேடை பெண் குருவி ஈன்இல் கரு உயிர்க்கும் இடம்: இழை இயர்-அமைக்கும் பொருட்டு, தேம்-தேன்; தீ கழை-இனிய கோல்; நாறா-மணம் வீசாத; கொழுதும்-கோதி எடுக்கும்; யாணர்-புது வருவாயையுடைய.) என்பது உள்ளுறை 'தன் பேடை கருவுயிர்த்தலுக்கு இடம் அமைத்தற்பொருட்டு ஆண் குருவி சுவை இனிமையையுடைய கருப்பங் கழியை நீக்கி மணம் வீசாத வெண்மையான அதன் பூவைக் கோதி எடுக்கும்’ என்பது இச்செய்யுட்பகுதியின் பொருள். இதனுள் அடங்கியிருக்கும் பொருள் இது: அறத்தொடு பொருந்திய இன்பத்தை நல்கும் தலைவி இருப்பவும், அவள்பால் அன்பின்றி, அன்பும் கற்பும் இல்லாத பரத்தையரைத் தலைவன் விரும்பினான் என்பது. - பரத்தை யொழுக்கத்தில் ஒழுகின தலைவன். பாணனைத் தலைவிடால் தூது அனுப்புகின்றான். பாணன் தோழியைச் சந்தித்துத் தலைவன் மிக்க அன்புடையவன்' என்று பாராட்டி வாயில் வேண்டியபொழுது, இவன் சொல்லத்தான் அவரது அன்பு புலப்படுகின்றது. மற்று அவர் செயலால் அறிந்திலம்’ என்று கூறி வாயில் மறுக்கின்றாள். மேற்கூறிய உள்ளுறையால் தலைவனது பரத்தை ஒழுக்கத்தையும் குறிப்பிட்டுக் காட்டு கின்றாள். - - (2) மாரி யாம்பல் அன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு 19. குறுந்:85 அ-30