உள்ளுறை உவமம் 467
வருடை மானின் குட்டி தாயின் மடியிலுள்ள பாலை வயிறாரப் பருகிப் பெரிய மலைப்பக்கத்தில் துள்ளுதற்கிடமாகிய நாட்டையுடையவன் என்பது இப்பாடற் பகுதியின் உள்ளுறைப் பொருளாகும். தலைவன் வரைந்து கோடற்குரிய பொருளை நிரம்பப் பெற்று ஈண்டு வந்து வரைந்து கொண்டு இல்லறம் நடத்துவான் என்பது இவ்வுள்ளுறையால் உணர்த்தப் பெறும் பொருளாகும். வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவன் வரைந்து கொள்ளாது காலம் நீட்டித்தானாக அக் காலக் கழிவினை ஆற்றாளாகிய தலைவியை ஆற்றுவிக்கின்றாள் தோழி. அவ்வமயம் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழியும் முறையில் தலைவியின் கூற்றாக அமைந்தது இப்பாடல்.
(4) சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்து மயங்குதுயர் உற்ற மையல் வேழம் உயங்குயிர் மடப்பிடி உலைபுறம் தைவர ஆம்இழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் மாமலை நாடன்”
(சோலை - வாழைத் தோட்டம். சுரிதுகும்பு - சுருண்ட குருத்து; இணைய-தான் வருந்தும்படி, அணங்கு-தெய்வம்: தலை-மத்தகம், நீவலின்-தடவுதலால், மதன்.வலி: மயங்கு துயர்-கலங்கிய துயரம்; உற்ற-அடைந்த மையல்மயக்கம்; வேழம்-களிறு, உயங்கு உயிர்-வருந்திய மூச்சை யுடைய; பிடி-பெண் யானை; உலை-வருந்தும்; புறம்முதுகு, தைவர-தடவ; ஆம்-நீர்; இழிதல்-இறங்கியோடு தல்; சிலம்பு-பக்க மலை; கண்படுக்கும் துயிலும்) 'யானையின் மத்தகத்தை வாழையின் சுருண்ட குருத்து தடவுதலால் அது வலியழிந்து மயக்கத்தை அடைந்து அதன் பின்னர் துயிலப்பெறும் என்பது இப்பாடலில் அமைந்த உள்ளுறை. 'நாம் வரைவு கடாவினமையின் மயங்கிய தலைவன் வரைந்து கொண்டு இடை யீடில்லாத இன்பத்தைப் பெறுவான்' என்று தோழி குறிப்பிடும் பொருள் இவ்வுள்ளுறையில் அடங்கி யுள்ளது. வரைவிடை வேறுபட்ட தலைவியை நோக்கி நின்
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/485
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
