பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் . 469 யைத் தமர் முதலாயினோர் இற்செறிக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது. நாரை வரவால் கனி விடுதலை பெறுவது போல், தலைவன் வரவால் தமர் முதலாயினோர் அவனுக்கு மகட் கொடை நேர்ந்து, தலைவியை இற்செறிப் பொழிக்கின்றனர். தலைவன் களவொழுக்கம் நீங்கித் தலைவியை மணந்து கொண்டு இல்லறம் நடத்துகின்றான். அப்போது தலைவியைப் பார்த்துப் போக வந்த தோழியிடம் அவள் தலைவியைக் கள வொழுக்கக் காலத்தில் நன்கு ஆற்றுவித்ததாகப் புகழ்கின்றான். அதற்கு மறுமொழி கூறும்முகத்தால் தான் தாய்க்கு அஞ்சியிருக்கும் காலத்தில் தலைவனே விரைய வந்து தலைவியை மணந்து தன் அச்சத்தை நீக்கினானேயன்றித் தான் செய்தது ஒன்றுமில்லை என்று தோழி முகமன் கூறுவதாக அமைந்தது மேற்குறிப்பிட்ட பாடற்பகுதி. (2) கிடங்கில் அன்ன விட்டுக்கரை கான்யாற்றுக் கலங்கும் பாசி நீரலைக் கலாவ ஒளிறுவெள் அருவி ஒண்துறை மடுத்துப் புவியொடு பொருத புண்கூர் யானை நற்கோடு நயந்த அன்பில் கானவர் விற்கூழிப் பட்ட நாமப் பூசல் உருமிடைக் கடியிடி கரையும் பெருமலை நாடன்”* (கிடங்கில் ஒர் ஊர்; விட்டுக் கரை - விட்டுக் விட்டுக் கரைத்துச் செல்லும்: கான் யாறு - காட்டாறு: ஒளிறு - விளங்கிய, மடுத்து-பாய்ந்து; பொருத- போரிட்ட: புண்கூர்.புண்மிக்க; கோடு - கொம்பு, தந்தம்; கானவர். வேடர்; நாமப் பூசல்-அச்சம் தரும் பிளிற்றலின் பேரொலி, உரும் - இடி, கரையும் - ஒலிக்கும்) - இந்தக் குறிஞ்சித்திணைப் பாடற்பகுதியில் வெளிப்படையாகப் புலனாகும் கருத்து இது: கான்யாற்றில் அடித்துக் கொண்டு வரப் பெறும் பாசி நீர் அலைத்தலால் யாண்டும் கலக்கின்றது. இந் நிலையில் வெள்ளிய அருவியோடும் துறையில் புலியுடன் யானை யொன்று பொருகின்றது. இந்நிலையில் யானையின் தந்தத்தை விரும்பும் அன்பில்லாத வேடர்கள் வில்லினின்றும் யானையின்மீது 24. டிெ - 65