பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/491

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள்ளுறை உவமம் 47 3 வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன் கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல் உடுவுறு கணையிற் போகிச் சாரல் வேங்கை விரியினர் சிதறித்தேன் சிதையூஉப் பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு நாடன்.” (வரைமலை. கழுது-பரண். உடுஉறு-இறகினைப் பொருந் திய, கணையில்-அம்புபோல்; சாரல்-பக்க மலை; விரி இணர்-விரிந்தபூங்கொத்துகள் சிதையூஉ-அழித்து மலை கெழுநாடன்-மலை நாட்டையுடைய தலைவன்) இக்குறிஞ்சித் திணைப் பாடற்பகுதியில், யானையின் வலிய நடையைக் கூர்ந்து அறிந்த வேட்டுவன் பரண்மீது ஏறிக் கவண் கொண்டு யானையை நோக்கிக் கல் எறிகின்றான். அது இறகினைப் பெற்ற அம்புபோல் விரைந்து சென்று பக்க மலையிலுள்ள வேங்கை மரத்தின் விரிந்த பூங்கொத்துகளைச் சிதறித் தேன் அடையைச் சிதைத்துப் பலாப்பழத்துள் சென்று தங்கி விடுகின்றது. இத்தகைய நாட்டையுடையவன் நம் தலைவன்' என்று தலைவனைத் தோழியிடம் குறிப்பிடுகின்றாள் தலைவி. வெளித்தோற்றத்திற்குக் குறிஞ்சி நில நிகழ்ச்சியொன்றினைக் காட்டுவதுபோல் தோன்றும் இதில் வேறொரு பொருள் உணர்த் தப்பெறுவதைக் காணலாம். மேற்கூறிய நிகழ்ச்சியில் யானை தலைவனுக்கும், தினைப் புனம் குறியிடத்துக்கும், வேட்டுவன் வேலனுக்கும், கவண்கல் வீசுதல் வெறியாடலுக்கும், கவண்கல் அலருக்கும், தேன் தலைவியின் இன்பத்திற்கும், பலாப் பழம் தலைவியின் உள்ளத்திற்கும் உவமையாக நின்று அப்பொருளை உணர்த்துகின்றது. வேலன் வெறியாடலால் எழும் அலர் தலைவன் குறியிடத்து வருதலைக் கெடுத்து, தலைவியின் இன்பத்தை அழித்துத்தலைவியின் உள்ளத்தில் தங்கிஅவளை வருத்தும் என்பது உணர்த்தும் பொருளாகும். (3) தலைவன் திருமணத்திற்கு இணங்கி அதற்குரிய ஏற்பாடு களைச் செய்யும் செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுகின்றாள்; வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவன் திருமணத் தின் பொருட்டுத் திரும்பும் செய்தியைத் தோழி கூறுவதுபோல் உணர்த்தும் பாடலின் பகுதி வருமாறு: 27. டிெ-292 ஒப்பிடுக; குறிஞ்சிக் கலி-5.