பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/497

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள்ளுறை உவமம் 479 யைப் புனைந்துரைப்பதுபோல் குறிப்பாகப் புலப்படுத்தும் கருத்துகளாகும். முடிவான கருத்து தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பதே யாகும். பத்துபாட்டில் குறிஞ்சிப் பாட்டிலுள்ள உள்ளுறை யுவமம் ஒன்றினைக் காண்போம். செவிலிக்கு அறத்தொடு நிற்கும் தோழி படிப்படியாகத் தலைவியின் களவொழுக்கத்தை வெளிப்படுத்து கின்றாள். தலைவியிடம் உள்ளுறு புணர்ச்சிமூலம் நட்புக் கொண்ட தலைவனைக் குறிப்பிடுங்கால் அவனது மலையின் இயல்பினைப் புனைந்துரைக்கும் முகத்தால் சில செய்திகளை வெளியிடும் பகுதி இது. ....அவ்வழிப் பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை முழுமுதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தெனப் புள்ளெறி பிரசமொடு ஈண்டிப் பலவின் நெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேறல் நீர்செத்து அயின்ற தோகை வியலூர்ச் சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி அரிக்கூட் டின்னியம் கறங்க ஆடுமகள் கயிறுார்ப் பாணியில் தளரும் சாறல் வரையற மகளிரின் சாஅய் விழைதக விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தள் தண்கமழ் அலரி தாஅய் நன்பல வம்புவிரி களத்திற் கவின்பெறப் பொலிந்த குன்றுகெழு நாடன்' iஅவ்வழி-அப்பொழுது; உக்க-உதிர்ந்து கிடக்கும்; முழு முதல்-பெரிய அடி; கொக்கு-மா மரம்; புள்-வண்டுகள்: பிரசம்-தேன்: ஈண்டி-கூடி, நெகிழ்ந்துஉகு-விரிந்து தேன் துளிக்கும்; தேறல்-கள்ளின் தெளிவு; நீர்செத்து-நீர் என்று கருதி, அயின்ற-பருகிய; தோகை-மயில்; வியல்-அகன்ற: சாறு-விழா; இயம்-இசைக் கருவிகள்: கறங்க-ஒலிக்க: பாணி-தாளம்; சாஅய்-தன்னலம் சிறிது கெட்டு; பொரு 33. குறிஞ்சிப் பாட்டு-அடி (186-199)