பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 அகத்திணைக் கொள்கைகள் கோப்போடு கலந்து நிற்கவும் கூடும் என்பதே அப்புறநடையாகும். இவ்வாறு கலப்பதற்கும் ஒரு வரையறை கூறுவர் தொல்காப்பியர். இவ்வரையறையும் திணை உணர்ச்சியைக் காப்பதற் கென்றே ஏற்படுத்தப்பட்டதாகும். இங்குத் திணை உணர்ச்சி என்பதும், தமிழ் இலக்கிய மரபால் ஏற்பட்டஒன்று என்பதும் சிந்திக்கத் தகும். உலக இயற்கையில் அமைந்து கிடக்கும் ஒன்று இஃதுடன் ஒட்டிவராது. திணைப் பாகுபாடு ஒரு கவிஉலக உண்மை: கவிதை அநுபவத்திற்கென நல்லிசைப் புலவர்களால் அமைத்துக் கொள்ளப்பெற்ற ஒரு கற்பனைப் பாகுபாடு. எனவே, ஒர் உரிப் பொருள் அல்லது வாழ்க்கை ஒழுக்கம் ஒரு குறிப்பிட்ட நிலைத்தில் ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் சூழலில் நிகழும் என்றல் ஒரு கற்பனைப் படைப்பாகும். இஃது உலகியலளவில் அடங்கிய ஒர் உண்மையன்று. ஆகவே, வெவ்வேறு திணைக் கூறுகள் கலந்து வரப் பாடுதல் என்பது-அதாவது திணை மயக்கம் என்பது-இயற்கை உண்மைக்கு மாறான தன்று. ஆயின், இது கற்பனைப் படைப்புக்கு, அமைத்துக் கொண்ட இலக்கிய நெறிக்கு, மாறானதாகும். கற்பனைப் பாகுபாடாகிய திணை உணர்ச்சிக்குக் கூறப்படும் புறநடையே திணைமயக்கமாகும். மயக்கம் என்பது இரண்டு அல்லது இரண்ட்ற்கு மேற்பட்ட பொருள்கள் கலந்து நிற்றலாகும், - இதுபற்றித் தொல்காப்பியரின் கருத்தைக் காண்போம். திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப புலன்நன் குணர்ந்த புலமை யோரே." ஈண்டுத் திணை என்பது நில ஒழுக்கம். முல்லை முதலிய இடுக்கம் அவ்வந் நிலத்திற்கே உரித்தாயொழுகாது தம்முள் மயங்கியும் வரும்; இது நீக்கப்படாது. ஒரு நிலத்தின்கண் இரண்டு ஒழுக்கம் தம்முள் மயங்கி வரும். ஆயின், இரண்டு நிலம் ஒரோ வொழுக்கத்தின்கண் மயங்கி வருதல் இல்லை. முதற் பொருளில் ஒரு திணைக்குரிய காலம் பிறிதொரு திணையுடன் கலந்து நிற்றல் உண்டு. அடியிற்கானும் எடுத்துக்காட்டுகளால் இதனைத் தெளியலாம். 2. டிெ-12 (நச்).