பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/503

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இறைச்சிப் பொருள் 485 திறம் தேர்ந்து அமைத்துக் கொள்ளப்பெறும் ஒரு சிறந்த முறை யாகும். உள்ளுறையும் இறைச்சியும் அகப்பொருள் நுதலும் தமிழ் இலக்கியங்கட்கே இயன்றதொரு புல்னெறி வழக்கமாகும் என்பது ஈண்டு நினைவு கொள்ளற்பாலது. புலவன் தான் சொல்லு கின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம். புலவன் தான் கூறிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுவது இறைச்சி. இரண்டுக்கு முள்ள வேற்றுமை இதுவே. ஆசிரியர் தொல் காப்பியனார் இறைச்சியை உடனுறை என்றும் குறிப்பர். இலக் கணக் கடலின் நிலை கண்டு உயர்ந்த பன்மொழிப் புலவர் உயர்திரு வே. வேங்கடாாஜூலு ரெட்டியார் அவர்கள் இறு தங்கு' என் பதன் அடியிற் பிறந்த பெயர் இறைச்சி என்று கூறியுள்ளார்கள் எனவே, இறைச்சி என்பதும் உடனுறை என்பதும் ஒரு பொரு ளைக் குறிக்கும் சொற்கள் என்பதனை நாம் அறிதல் வேண்டும். உள்ளுறை வகை : ஆசிரியர் தொல்காப்பியனார் பிறிதொரு பொருள் தோன்ற நிற்குமாறு உள்ளுறையாகக் கூறுவதை ஐந்து வகையாகப் பிரித்துரைப்பர். உடனுறை உவமம் சுட்டுநகைச் சிறப்பெனக் கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே." என்பது அவர் கூறும் விதி. இவற்றுள் உடனுறை என்று கூறப் பெறும் இறைச்சியும் உள்ளுறை உவமும் இலக்கியங்களில் பயின்று வருவன; வழக்கில் உள்ளன. ஏனைய சுட்டு, நகை, சிறப்பு என்பன அதிகம் பயின்று வருதலில்லை; வழக்கிலும் இல்லை. எனவே, உள்ளுறை உவமம் இறைச்சிப் பொருள் ஆகிய இரண் டிற்கு மட்டிலுந்தான் தொல்காப்பியர் விதி கூறி விளக்கியுள்ளார். ஏனைய மூன்றன் பெயர்களைக் குறிப்பிட்டனரே யன்றி அவற்றின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறினாரிலர். ஆனால், உரை யாசிரியர்கள் இவற்றைச் சிறிது விளக்கியுள்ளனர். இளம்பூ சனரின் விளக்கம்: உடனுறையாவது, உடனுறைவ தொன்றினை சொல்ல, அதனாலே பிறிதொரு பொருள் விளங்குவது. அது கருப் பொருள்பற்றி வரும். உவமம் என்பது, உவமையைச் சொல்ல உவமிக்கப்படும் பொருள் தோன்றுவது. 1. கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாமலர் (இறைச்சிப் பொருள் என்ற கட்டுரையில்) 2. பொருளியல் - 46