பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் 489 வீடு நோக்கித் திரும்பி வருகின்றவன் தன் நெஞ்சொடு கிளந்து மகிழ்கின்றான். தலைவன் கூற்றாக வரும் பாடல்: மள்ள ரன்ன தடங்கோட் டெருமை மகளி ரன்ன துணையொடு வதியும் நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே கழனித் தாமரை மலரும் கவின்பெறு சுடர்நுதல் தந்தை ஊரே." (மள்ளர்-மறவர்; தடம்கோடு-பெரிய கொம்பு; துணைகாதல் துணை நிழல்முதிர்-தல்நிழல் மிக்க, இலஞ்சி. நீரோடை, பழனம்-வயல்; கவின்-அழகு, நுதல்-நெற்றி! இந்த மருதத் திணைப் பாடலின் வெளிப்படைப் பொருள் இது மறவரையொத்த பெரிய கொம்பினையுடைய எருமைக் கடாக்கள் தத்தம் காதல் துணையாகிய பெண் எருமைகளுடன் இனிதாக உறைதற்கிடனாகவும், ஞாயிற்றின் வரவு கண்டு தாமரை மலர்கின்ற வயல்களையுடையதாகவும் உள்ள நன்னிழல் மிக்க நீரோடையையுடைய பழனங்களின் நடுவில் இருப்பதுவே அழகுடன் ஒளி பொருந்திய நெற்றியையுடைய என் காதலியின் தந்தையினுடைய ஊராகும்' என்பது. தலைவனின் கருத்தில் இருக்கும் பொருள். இது தலைவியை வரைந்து கொண்ட பிறகு அவளுடன் தான் இன்ப வாழ்வு வாழ லாம் என்பதுவும், தன் வரவு கண்டு தலைவியும் பிறரும் கண்டு மகிழ்வர் என்பதுவுமாகும். இக்கருத்து தலைவனின் கூற்றால் எங்ஙனம் பெறப்படுகிறது? எருமை துணையொடுவதியும்’ என்ப தால் தான் இனித் தலைவியுடன் மகிழ்வுடன் வதியலாம் என்ற தலைவனின் நினைவைக் குறிப்பிடுகின்றது. தாமரை மலரும்' என்றது பொருள்வயிற் பிரிந்த தன்னுடைய வரவால் தலைவியும் அவளுடன் ஒருமித்த கருத்துடைய பிறரும் முகமலர்ந்து மகிழ்வர் என்ற அவன் நினைவையும் உணர்த்துகின்றது. தலைவன் கூற்றினின்றும் வேறொரு பொருள் உணர்த்தப்படுவதால் இஃது இறைச்சியாயிற்று. (2) பாலது ஆணையால் தலைவனும் தலைவியும் ஒரு பொழிலகத்தில் சந்திக்கின்றனர். இயற்கைப் புணர்ச்சியும் நடை பெறுகின்றது. தலைவி ஆயத்தோடு செல்லுவதைக் கானும் தலைவன் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது. 8. ஐங்குறு-94,