பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணை மயக்கம் 33 புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும் குன்றுகெழு நாடன் மறந்தனன் பொன்போல் புதல்வனோடு என்cத் தோனே.” (பெண்பால்-பிணவு (பெண் பன்றி), குருளை-குட்டி: மருப்பு-கொம்பு; கேழல்-ஆண் பன்றி, நீத்தனன். பிரிந்தனன்.) இது கருப்பொருளாலும் முதற்பொருளாலும் குறிஞ்சி; ஆயின் புணர்ச்சி நிகழ வேண்டிய இடத்து ஊடல் நிகழ்ந்தது. ஆகவே இது குறிஞ்சிக்கண் மருதம் ஆகும். - அன்னாய் வாழிவேண் டன்னைஎன் தோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயின் என்னது உம் அறிய வாகுமோ மற்றே முறியினர்க் கோங்கம் பயந்த மாறே." (பசந்தனள். நிறம் மாறினாள்; சிவந்த கண்ணை. சினத்தால் சிவந்த கண்ணையுடையாய்; கடவுதிவினவா நின்றாய். இது பூத்தரு புணர்ச்சியால் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. இது பாலையில் குறிஞ்சி. கருப்பொருளால் பாலை: ஒழுக்கத்தால் குறிஞ்சி. இதில் உரிப்பொருளோடு உரிப்பொருள் மயங்கிற்று. - - கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் நிலவே." (வீ-பூ; துறுகல் - குண்டுக்கல்; எல்லி - இரவு: நல்லை அல்லை - நன்மை தருவாய் அல்லை) இது கால மயக்கம். குறிஞ்சியில் வரவேண்டிய கார் காலத்திற்குப் பதிலாக வேனில் வந்தது. வேங்கை பூத்து உதிருங்காலம் வேணிலா தலின் இங்ஙனம் உரைத்தார். 3. ஐங்குறு-265 4. டிெ-366, 5. குறுந்- 47 அ-3