பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/512

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


494 அகத்திணைக் கொள்கைகள் நின் காதலர் என்பது நாம் கண்கூடாகக் கண்ட உண்மையன்றோ? இத்தகைய பேரன்புடையோர் கருவிளை நின்கண்போல் மலரவும், பீர்க்கு நின்மேனியையொத்துப் பொன்போல் மலரவும் கண்டு காதலர் பிரிந்துறைதற்கியலாத இந்தப் பனிபடு பருவத்தில் மறந்து றைவாரல்லர்; இன்னே வருவர்” என்பது. தோழி இதில் உணர்த்தக் கருதும் பொருள்: காதலர் உறையும் நாட்டிலும் இப் பருவத்தில் கருவிளை நின் கண்ணைப் போன்று மலர்ந்து நின்னை இடையறாது நினைப்பிக்கும், நின் பசலையைப் பீர்க்கம் பூக்கள் நினைப்பிக்கும். ஆதலின் அவர் நின்னை நொடிப் பொழுதும் மறத்தல் இயலாது.’’ என்பது. தோழியின் கூற்றில் பிறிதொரு பொருள் தோன்றினமையால் இறைச்சிப் பொருள் ஆயினமை காண்க. தோழி கூற்றில் இப் பொருள் பெறப்படும் முறையையும் காண்போம். கண்ணெனக் கருவிளை மலர என்றதால், கருவிளை மலர்நின் கண்ணை நினைப் பித்து நின்னை மருவுவதற்கு விரும்புவ்ர் என்பதும், இவர் கொடிப் பீரம் இரும்புதல் மலரும் என்றதால், பீர்க்கம் பூ நின் பசலையை நினைப்பித்து நினக்குப் பரிவர் என்பதும் பெறப்படுதலை அறிக. ஆதலால் இன்னே வருகுவர், வருந்தற்க’ என்று குறிப்பெச்சமாக நின்று பாட்டின் சுவையை மிகுவிக்கின்றதையும் கண்டு மகிழ்க. குறுந்தொகையில் : சில இறைச்சி பொருள்களைக் காண் போம். (1) களவு முறையில் ஒழுகும் தலைவன் இரவுக் குறியை நாடி வருகின்றான். இரவுக் குறியில் அவனுக்கு நேர இருக்கும் தீங்குகளை எடுத்துக் காட்டி இரவில் வருவதைத் தவிர்க்குமாறு வேண்டிக் குறி மறுக்கின்றாள் தோழி. கருங்கட் டாக்கலை பெரும்பிறிது உற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி ஒய்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் ஈாரல் நாட...”* (கருங்சுண் - கரிய கண் தா கலை - தாவுதலையுடைய ஆண் குரங்கு பெரும் பிறிது - இறந்து பாடு; உய்யா போக்க மாட்டாத மந்தி - பெண் குரங்கு; பறழ் - குட்டி: சேர்த்தி - ஒப்பித்து; செகுக்கும் - மாய்த்துக் கொள்ளும்) 14. குறுந். 69