பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/515

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இறைச்சிப் பொருள் 497 தினையை உண்கின்றது. அத்தகைய பிடிகள் நிறைந்த நாட்டின் தலைவன்' என்பது. இதில் தோழி உணர்த்த விரும்பின பொருள்: "நீயும் யாங்கள் நின் வரவை எதிர் நோக்கி மகிழ்ந்திருக்குங்கால் நின்கடப் பாட்டையும் இவளை வரைவதையும் ஒருங்கே செய்வித்தற்குக் கருவியாகிய பொருளை ஈட்டி வருதற்குரியை' என்பது. இதில் தோழிக் கூற்றினின்றும் பிறிதொரு பொருள் பயந்து இறைச்சி யான நுட்பத்தை ஒர்ந்து அறிக. நற்றிணை யில்: சில இறைச்சிப் பொருள் அமைந்த பாடல் களை அநுபவிப்போம். (1) பல நாள் பரத்தையின் வீடே கதி எனக் கிடந்து திரும்பி வருகின்றான் தலைவன். தலைமகள் ஊடி நிற்கின்றாள். அவளது ஊடலைத் தீர்க்க விறலியை அனுப்புகின்றான் தலைவன். அவளைக் கண்ணுற்ற தோழி வெகுண்டு கூறுவதாக அமைந்தது இப் பாடல்: விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர் வாளை பிறழும் ஊரற்கு நாளை மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே! தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன் சொல்லலை கொல்லோ?..." (சுடர்-ஒளி, பாசடை-பசிய இலை; தயங்க-அலைபட: இரிய-அஞ்சி ஒட, குண்டு நீர்-ஆழமாகிய நீர்மிக்க பொய் கையில்; மகட்கொடைஅடுத்த நாளைக்கும் ஒருத்தியை: எதிர்ந்த-நேர்ந்த,மடம்-அறியாமை,பெண்டே-பெண்ணே: உலைந்த-குலைந்த குறுமொழி-தாழ்மையுடைய சொல்) இந்த நெய்தல் திணைப் பாடற்பகுதியில் தோழி வெளிப் படையாகக் கூறுவது; “தாமரை வருந்த மகளிர் இரிந்தோடக் குண்டு நீரில் வெடிபாய்ந்து பிறழும் ஊரினையுடைய எம் தலைவற்குப் பரத்தையரை அமைத்துக் கொடுக்கும் விறலியே! நீ 18. நற். 310 அ-32