பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/520

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


502 அகத்திணைக் கொள்கைகள் கலித்தொகையில் : சில இறைச்சிப் பொருள்களைக் கண்டு மகிழ்வோம். - - (1) தலைவியின் களவெழுக்கக் காலத்தில் இற்செறிப்பு நேரிடு கின்றது; காவலும் மிகுதியாகின்றது. ஆற்ற இயலாத தலைவி தலைவன்பாற் சென்ற தன் நெஞ்சினை நோக்கிக் கூறியதாக அமைந்த பாடற் பகுதி இது: கருங்கோட்டு நறும்புன்னை மலர்சினை மிசைதொறும் சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இருந்தும்பி இயைபூத ஒருங்குடன் இம்மென இமிர்தலிற் பாடலோ(டு) அரும்பொருள் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போல் பெருங்கடல் துயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்’’ |கோடு.கொம்பு; சினை-கிளை சுரும்பு-வண்டினம்; இரும் தும்பி-கருநிற வண்டு; இயைந்து-சேர்ந்து, இமிர்தல்-ஒலித் தல்; மரபு-முறைமை; கானல்-கடற்கரைப் பகுதி) இந்த நெய்தற்கலியில் தலைவி வெளிப்படையாக உணர்த்தும் பொருள்: 'கரிய கொம்பினையுடைய புன்னையின் சினையில் உள்ள மலர்களை நுகர்தற்குச் சுரும்பினம் செவ்வி பார்த்து ஆரவாரிக்கின்றது. அதன் ஒசையுடன் கரிய தும்பிகளும் ஒலிக்கும் ஓசையும் சேர்ந்து இம்' என்ற ஓசை எழுகின்றது. இந்நிலையில் பாட்டையும் யாழையும் கேட்டுப் பள்ளி கொண்டு உறங்கும் பரந்தாமனைப்போல கடலும் ஒலியவிந்து உறக்கத்தை மேற் கொண்டு விட்டது. இத்தகைய கானல்’ என்பது. தலைவியின் கருத்தில் இருக்கும் பொருள்: ‘யாமும் தாமச் செவ்வியறிந்து நம் தலைவருடன் நுகரப் பெற்றிலோம்; நாமும் பாட்டையும் யாழையும் போலும் ஒசை கேட்டுத் தலைவனிடம் துயிலப் பெறுகின்றிலோம்' என்பது. இக்கருத்து தலைவனின் கூற்றினின்றும் பெறப்படும் முறையைக் காண்போம். புன்னை மலரும் செவ்வி பார்த்து அவற்றை நுகரும் சுரும்பினமும் தும்பி யினமும் நுகர்கின்றன என்றதால், முதற் கருத்தும், பாட்டையும் யாழையும் கேட்டுக் கடல் உட்படத் துயில்கின்ற காலத்தே என்ற தால் இரண்டாவது கருத்தும் பெறப்படுகின்றன. இதில் தலைவி யின் கூற்றின் புறத்தே தோன்றும் பொருளினால் இறைச்சி தோன்றியதை நுண்ணிதின் உணர்க. 23. நெய்தற் கலி-6