பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் 505 பட வந்தது. ஒன்றனைப் பிறிதொன்றாகப் பிறழவுணரும் நாதன் ஆதலின், தெய்வத்திற்குரிய நறுமலரைச் சூடாத குறமகளிராகிய எம்மை அம்மலரைச் சூடுவோம் என்று பிறழவுணர்ந்தாய்' என்பது இதன்கண் அமைந்த இறைச்சிப் பொருள். ஒத்த தோற்றம் உடைமைபற்றி, அஞ்சப்படாததனையும் அஞ்சுதற்கு இடனாயது எமது மலை நிலமாதலின், எம் குலத்திற்கு ஏலாததாய் நீ தரும் தெய்வமலரைச் சூடுதற்கு யாம் அஞ்சுதல் சொல்ல வேண்டுமோ?! எனக் கூறித் தோழி மறுத்ததாக இறைச்சிப் பொருள் கொள் ளினும் பொரு ந்தும் என்பர் பேராசிரியர். இதுகாறும் சங்கப்பாடல்களில் வரும் இறைச்சிப் பொருளில் ஆழங்கால்பட்டு நுகர்ந்தோம். சொற்பொருளுக்குப் புறத்தே தோன்றும் பொருள்தான் இறைச்சியாகும் என்பதனைத் தெளி வாக அறிந்தோம். இறைச்சிப் பொருளினின்று தோன்றும் பொருளும் உண்டு. வடநூலார் இதனை அனுரணன த்வனி" என்பர். ஒரு பொய்கையின் நடுவில் ஒரு கல்லை எறிந்தால், அதனால் ஒர் அலை தோன்றி, அதிலிருந்து ஒவ்வொன்றாகப் பல அலைகள் தோன்றிக் கரைவரைக்கும் வருவன போல, கவிதை யிலும் ஒரு பொருளிலிருந்து பல பொருள்கள் தோன்றுவதுண்டு. இவ்வாறு தோன்றுவதை, வீசி தாங்க நியாயம்' (தரங்கம்.அலை) என்பர் வடநூற் புலவர். தொல்காப்பியரும், இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெளியு மோர்க்கே.' என்று விதி கூறியுள்ளார். இதற்கு உரை கூறும் இளம்பூரணரும் சொற்பொருளுக்குப் புறத்தே தோன்றுவதாகிய இறைச்சிப் பொருளினின்று தோன்றும் பொருளும் உள என்று உரைப்பர். அஃதாவது, குறிப்புப் பொருளினின்று தோன்றும் குறிப்புப் பொருளும் உண்டு என்பது இதன் கருத்து. பொருளுமாருளவே" என்று கூறுவதால், இவ்வாறு தோன்றும் பொருள் சிறுபான்மை யாகவே இருக்கும் என்பது போதருகின்றது. திறத்தியல் மருங்கி தெளியுமோர்க்கே என்பதால், இப்பொருளை உணரும் ஆற்ற அடையாரும் சிலரே என்பதும் பெறப்படுகின்றது. வடநூலாரும் குறிப்புப் பொருளை அறிதலே அருமை என்று கூறியுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கி உணர்தற்பாலது. 26. பொருளியல்-34 இளம்)