பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/524

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


506 அகத்திணைக் கொள்கைகள் ஒர் எடுத்துக்காட்டால் இதனை விளக்குவோம். எல்லா உதுக்காண் எழில்நீர்ப் பொய்கைப் பரந்த தாமரைப் பாசடைக் குருகு துளக்கமில் உடலதாகிப் பசுங்கலத்து வளையொளிர்ந் தாஅங் கொளிசெய் வதுவே, (எல்லா - தலைவனே, உதுக் காண் - அதோ பார்: எழில் . அழகு: பொய்கை - குளம்; பாசடை - பசுமையான இலை; குருகு - நாரை, துளக்கம் இல் - அசையாத, வளை - சங்கு) என்பது ஒரு பொய்கை வருணனைச் செய்யுள்; தலைவனை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. பசிய தாமரை இலை யிலுள்ள நாரை அசையாது இருக்கின்றது என்பது துளக்கமில் உடலதாகி’ என்பதன் சொற்பொருள். அதனால் அந்த இடம் மக்கள் நடமாட்டம் இல்லாதது என்ற குறிப்புப் பொருள் தோன்றும்.அக்குறிப்புப்பொருளிலிருந்து'அவ்விடம்குறியிடத்திற்கு ஏற்றது என்னும் குறிப்பும், அதனால் புணர்ச்சி நெடிது நிகழ்தல் கூடும் என்ற குறிப்பும் தோன்றுவதை அறிக. எனவே, குறிப்புப் பொருளின் சிறப்பும் அதன் அருமையும் ஒருவாறு தெளியப் பெற்றது. குறிப்புப் பொருள் சொற்பொருளினின்றும் சிறக்கும் பொழுது அதனைத்தொனி என்று கூறுவர் வடநூலார். முடிவில்லாத அகப்பொருள் ஒழுகலாற்றில் பெறும் இன்பம் அனைத்தும் குறிப்புப் பொருள்களால் விளங்கித் தோன்றும்படி வகுத்துரைத்தனர் நம் முன்னையோர். இதனைத் தொல் காப்பியர், அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே." என்ற விதியால் கூறுவர். தலைவன் தன் தன்மையென்ப தொன் றன்றி நந்தன்மை எனக் கருதுதலின், யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் அச் சொற்களைக் கேட்டு வெகுளாது இன்பம் எனக் கொள்வன் என்ற கருத்தால் தலைவியும் தோழியும் அவனுடைய குறைகளைக் குறிப்பாகப் புலப்படுத்தி இடித் துரைக்கும் நிலையில் கூறிய உள்ளுறைப் பொருண்மையினைக் கேட்ட தலைவன் இவை இன்பந் தரும்’ என்றே ஏற்றுக் கொள்வன் என்பது நச்சினார்க்கினியர் இதற்குத் தரும் விளக்கம். எனவே, இத்தகைய் உள்ளுறைப் பொருண்மையாலும் இறைச்சிப் பொருண்மையாலும் தலைமக்களது இன்ப உணர்வு வளர்ந்து சிறத் தலைக் காணலாம். - 27. டிெ - 49 (நச்)