பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/525

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII

அகத்திணைச் சிறப்பியல்

நமக்குக் கிடைத்துள்ள சங்கச் சான்றோர் இயற்றிய பாடல்கள் 2381; இயற்றியவர்களின் தொகை 473. இப் பாடல்கள் அகத்திணை, புறத்திணை ஆகிய இரண்டு திணைகளும் பற்றியவை. இவற்றுள் அகத்திணைக்கு மட்டிலும் உரிய செய்யுட்கள் 1862; இவற்றை இயற்றியவர்கள் 378 சான்றோர்கள் ஆவர். இவர்தம்முள் பெண் புலவோர் இருபத்து மூவர்; இவர் பாடிய பாடல்களின் தொகை 97 ஆகும்.


மேற்குறிப்பிட்ட 473 சங்கச் சான்றோர்களுள் அகத்திணை பாடாது புறத்திணையை மட்டிலும் பாடியவர்களின் தொகை 95; இவர்தம்முன் ஆண்பாலார் 86; பெண்பாலார் 9. புறத்திணை பாடாது அகத்திணை மட்டிலும் பாடியோரின் தொகை 301; அகத்திணை, புறத்திணை ஆகிய இரண்டுதிணைகளையும் பாடியோரின் எண்ணிக்கை 71. அகத்திணையுள்ளும் கற்பியல் பாடாது களவியல் மட்டிலும் பாடியோரின் தொகை 145; களவியல் பாடாது கற்பியல் மட்டிலுமே பாடியோரின் தொகை 140; களவு, கற்பு என்ற இரு கைகோள்களையும் பாடியவர்கள் 93 பேர் ஆவர். இவர் தம்முள் ஒரு தினை பாடிச் சிறப்புப் பெயர் பெற்றவர்களும் உள்ளனர்; ஒரு துறை பாடி சிறப்புப் பெயர் பெற்றவர்களும் உள்ளனர். முதல், கருப்பொருள்களைச் சிறிதும் காட்டாது உரிப் பொருள் மட்டிலும் நுவலும் அகப்பாடல்களும் சங்கச் சான்றோர்களின் பாடல்களுள் பல உள்ளன. கைக் கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதிணை என எண்ணுங்கால், குறிஞ்சி முதலாம் சொற்களைக் கருதுங்கால் நிலமில்லாக் கைக்கிளை பெருந்திணைகளோடு எண்ணப்படுதலின் இவற்றுக்கு நிலப்பொருள் செய்தல் கூடாது; உரிப்பொருள் கோடலே என்பது தெளிவாகின்றதன்றோ?