பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/526

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


508 அகத்திணைக் கொள்கைகள் இவ்விடத்தில் பேராசிரியர்டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் கூறிய கருத்துகள் சிந்திக்கத் தக்கவை. நீண்ட காப்பியம் செய்யும் புலவனுக்குரிய கட்டுப்பாடுகள் அகப்புலவனுக்கு இல்லை. காதலை நினைத்த துறையில், நினைத்த கூற்றில், அடியளவில் பாடலாம். ஆண் புலவர் கள் தலைவி, தோழி, செவிலி கூற்றாகவும்; பெண் புலவர்கள் தலைவன், பாங்கன், பாணன் கூற்றாகவும் பாடலாம். துறைத்தேர்ச்சி முதலியனவெல்லாம்.அவரவர் விருப்பம். அகப்புலவன் தனிப் பாடல் செய்பவன். நல்ல தொரு சிந்தனை தோன்றுமேல், ஒரு பாடல் எழுதி உல கிற்கு அறிவிக்கும் பெருவாயில் அவனுக்கு உண்டு. அகத் திணையின் அமைப்பால் பலர்தம் சிந்தனைகளைச் சமுதாயம் அறிய முடிகின்றது. யார் கண்ட காதற் கருத் தும் ஒன்று, சிறிது என்பதற்காக உள்ளடக்கவேண்டுவ தில்லை; ஒரு சிறுபாட்டாக வேனும் உருப்படுத்தும் ஆற்றலை அகத்திணை வகுக்கின்றது. பாடுவார்க்கு அகத்திணைபோல் பாடுரிமை வழங்கும் இலக்கியம் பிறி தில்லை என்பது என் கருத்து. ஓரிலக்கிய நெறிபற்றிய நானூறு புலவர்களை எம்மொழியிலாவது காண முடியுமா? தமிழ்மொழி காட்டுதலின் அதன் இலக்கியச் சிறப்பு மிகப் பெரிது என்று உணர்க. அகத்தமிழ் இலக் கியம் தலையாயது என்று அறிக. “அகத்திணைப் புலவன் உணர்ச்சித் திறமும், உலக அறிவும் உடையவன்; நிலவியற்கையும் கால இயற்கையும் மரஞ்செடி கொடி விலங்குகளின் கல்வியும் பெற்றவன். காதல் உரிப் பொருளைப் பாடுகின்றவன் புணர்ந்தார் பிரிந்தார் என்று வெறுமனே பாடிவிடுதல் இயலாது; பாடினும் சிறவாது. உரிப்பொருளுக்கேற்ப இயற்கைச் சூழ்நிலைகளைப் புனையவேண்டும். நிலமும் காலமும் கருப்பொருளுங்காட்டி உரிப் பொருளைத் திறப்படுத்த வேண்டும். முதல்கரு உருப்பொருள் என்ற மூன்றே துவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை’ 1. அகத்திணை-3