பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 511 பேயனார் (முல்லை) ஆகியோர் அடைகளைப் பெற்றிலர் எனினும் அவ்வத் திணைகளைப் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்கு ஐயமில்லை. இவர்களைப்பற்றி இந்த இயலில் குறிப்பிடுவோம். (i) நல்லு(ரு)த்திரனார் இவர் அகத்திணையில் முல்லைக் கலியைத் தவிர (17 பாடல்கள்) வேறு பாடவில்லை. பிறதொகைகளில் இவர்தம் பாடல்கள் இலவாதலின் இவர் பர்டிய யாப்பு கவிப்பாவைத் தவிர வேறு இல்லை. பிற அகப்பாடலாசிரியர்களிடம் காண இயலாத ஒரு தனிக் கூர்மை இவரிடம் உண்டு. நாடக வழக்கை விடுத்து உலகியல் வழக்காகவே முல்லைக் கலியை ஆக்கியிருத்த ல் இவர்தம் தனிச் சிறப்பு. முல்லைத் திணை புலவர்தம் கற்பனை செறிந்த இலக்கியப் புனைவுக்கு பெருவாய்ப்பு தருவதில்லை. இதில் உருத்திரனார் இத்திணைக்கு உரிய முதல் கருப் பொருள்களை அமைத்துக் கொண்டாரேனும், இத்திணைக் குரிய இருத்தல் என்ற உரிப் பொருள் பாடாது, குறிஞ்சித் திணைக் குரிய புணர்தலைப் பாடி இலக்கிய வெற்றி கண்டார். உரிப் பொருள் மாற்றத்தாலும், ஆயர்தம் அன்றாட ஒழுகலாறுகளை அமைத்துக் கொண்டதாலும் முல்லைக் கலி முத்தெனப்புத்தொளி பெற்றுத் திகழ்வதாயிற்று. - முல்லைவாழ் கோவலர்களின் சமுதாய இயல்புகளையும் அவ்வியல்புகளுக் கேற்ப அமைந்த காதலையே புனைந்தாலும் அகத்திணை இலக்கணம் சிறிதும் ஊறுபடாதவாறு முல்லை ஒழுகலாறுகளைநயமாகப் பொருத்திக்காட்டியிருப்பது பாராட்டத் தக்க இவர்தம் பண்பாகும். கொல்லேற்றினை மடக்கிய வனுக்கே பெண் கொடுப்பது முல்லை வழக்கமாக இருந்தது. காளையை எவன் மடக்கினாலும் அவனைப் பெண் மணந்து கொள்ள ஒருப்படுவாள். ஏறு தழுவாததற்கு முன்னரே ஆய மகனுக்கும் ஆய மகளுக்கும் உள்ளப் புணர்ச்சி உண்டு (கலி.101) என்பதை உருத்திரனார் சுட்டிக் காட்டுவர். ஏறுகோள் வழக்கம் அகத்திணை ஒழுகலாற்றிற்கு இயைந்து நடைபெறுகின்றது.