பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 - அகத்திணைக் கொள்கைகள் முல்லைத்திணையின் உரிப்பொருள் இருத்தல்; அதாவது, தலைவனது பிரிவுக் காலத்தில் ஆற்றியிருப்பது. தலைவன் குறித்துக் சென்ற பருவ வரவு கண்டு தலைவி வருந்துதல், வருந்துபவளைத் தோழி ஆற்றுவித்தல், வினைமுடிவில் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தல் போன்ற நிகழ்ச்சிகள், சங்க இலக்கியத்தில் நிரம்பக் காணப்பெறும் துறைகள், முல்லைக் கலியில் இடம் பெற்றில. இவர்தம் 17 பாடல்களுள் ஒன்றே ஒன்று மட்டிலும் (கலி-109) கைக்கிளைத் திணையாக அமைந்துள்ளது; ஏனைய 16ம் களவியல் துறைகளாம். பிறர்போல் கற்புத் துறைகளை இவர் அமைத்திலர். முல்லைச் சமுதாயத்தின் காதல் ஒழுகலாறுகளைக் காட்டுவதற்காகவே இவர் முல்லைக் கலிகளை அமைத்தார் போலத் தோன்றுகின்றது. முதல் ஏழு கலிப் பாடல்கள் ஏறுகோள் விழாவினையே பெரிதும் புனைந்து காட்டு கின்றன. திணைதோறும் காதற் களங்கள் - காதலர்கள் சந்தித்துப் பேசும் இடவாய்ப்புகள் - நிலத்தில் வாழும் மக்களின் தொழிலுக் கேற்பக் கவிஞர்கள் காதலர்களின் காண்பிடங்களைப் புனைந்து காட்டுவர். இக்காதற் களங்கள் முற்றிலும் உலகியல் ஒழுகலாறு களுக்குப் பொருந்துவனவாகவே அமையும். முல்லை நிலக் குறுமகள் மோர் விற்கச் செல்வாள்; இடைக் குல ஆண்களும் ஆடு மாடுகளை மேய் நிலங்கட்கு ஒட்டிச் செல்வர். ஆதலின் நல்லுருத்திரனார் இவ்விடங்களைக் காதற் களங்களாகத் தம் பாடலில் புனைந்து காட்டுவர். காதற் காட்சிகள் நானிலங்களில் நிகழ்வனவே, காதற் காட்சி பாலை நிலத்தில் நிகழ்வதில்லை என்பது அறியத்தக்கது. இலக்கியங்களில் பாலைநில மக்கள் தலைமக்களாகவும் வருவதில்லை; பாலை நிலச் சூழ்நிலையும் காதலர் காட்சிக்குக் கூறப்பெறவில்லை. உருத்திரனாரின் முல்லைக் கலிப் பாடல்களில் உரையாடல்கள் நயமாக அமைந்துள்ளன. முல்லை நிலத்தார் ஆடு மாடுகளை மேய்க்கும் குறும்பர்கள். பரந்த மேய்ச்சல் தொழிலுக்கு ஏவலாட்களை அமர்த்திக் கொள்வர். இந்த ஏவலாட்களைத் தலைமக்களாகக் கொண்டு பாடிய திணைச் சிறப்பு இப் புலவர் பெருமானுக்கு உரியது. இவர்தம் காதலையும் பேச்சுகளையும் ஆறு கலிப் பாடல்களில் காட்டியுள்ளார். இப் பெருந்தகை. 3. தமிழ்க் காதல் - பக். 193.