பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/535

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 517 நல்ல துறைகளாகத் தேர்ந்தெடுத்துப் பாடப்பெற்ற இவர்தம் பாடல்கள் கற்பவர்க்கு நல்ல இல்லற வழிகாட்டியாக அமைந்துள் ளன. இவை பெருந் துயரும் பெருங்களிப்பும் ஆகிய மிகை உணர்ச்சிகள் இல்லாமல் அமைதியாக இயங்குகின்றன. பிற ஐங்குறுநூற்றுப் புலவர்கள்போல் பல்வேறு துறைகளைக் கையாளாமல், ஒரே துறையில் பப்பத்து உள்ளங்களைக் காட்டி அமைவர்; துறையைப் பலவாக்கி உள்ளங்களைப் பலவாக்காமல் துறை ஒன்றின்மேலேயே உள்ளப் புனைவு பலவாறு செய்தல் இவர்தம் தனிச் சிறப்பு. பேயனார் காட்டும் தலைவன் ஒரு போர் மறவன் வேந்தன் துணைவன். இல்லறத்தை நினைந்து போற்றுபவன். பகைவன் திறை கொடாமையால் போர் தொடர்ந்து நடைபெறுகின்றது. பாசறைக்கண் உள்ள தலைவன் தான் சொல்லி வந்த பருவ வரவு கண்டு தலைவி மனங்கவல்வாளே என்று சிந்திக்கின்றான். அரசன் போரினைக் கைவிடுவானேல் நெடுந் தொலைவினைக் கருதாது ஒல்லெனச் சென்று, இலங்கு நிலவின் இளம்பிறை போலக் காண்குவென் தில்லவள் கவின்பெறு சுடர்நுதல் என்று தன்னுட் கூறி ஏங்குகின்றான் (ஐங்-443). கடமை முடிவு பெறுகின்றது. • , ஆறுவனப் பெய்த அலர்தாயினவே: வேந்துவிட் டனனே: மாவிரைந் தனவே; முன்னுறக் கடவுமதி பாக! நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே." |வனப்பு-அழகு, அலர்மலர்: தாயின-பரவின, விட்டனன். விடையீந்தனன். மா-குதிரை: கடவுமதி-செலுத்துக: நுதல்-நெற்றி, நலம்.அழகு) தலைவனுக்குக் காதல் பொங்குகின்றது; உவமை மீதுார்கின்றது விரைந்து தேரினைச் செலுத்துமாறு பாகனைத் துரண்டுகின்றான். பாடலின் சிறு தொடர்கள் மகிழ்ச்சி பொங்குதலைப் புலப்படுத்து கின்றன. - போர்முடிந்த தலைவனது காதல்நிலைகளைப் பல்வேறு வகை யால் புனைந்து காட்டுவர் பேயனார். பாகனுக்குக் கட்டளையிடும் 6. ஜங்-483.