பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/536

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


518 அகத்திணைக் கொள்கைகள் சொற்களிலும், வழியில் காணும் காட்சிகளிலும் அவன் உள்ள மயக்கத்தை அறியலாம். பாகனின் விரைவு தலைவனது உள்ள விரைவுக்குக் குறைவாகவே காணப்பெறுகின்றது. எனவே, முள்ளிட்டு ஊர்மதி வலவ! என்று குதிரையைத் தாற்றுக்கோலால் குத்தி விரைவு செய்க என ஏவுகிறான் (ஜங்-481). வினை நீட்டித்த விடத்தும், கார்ப்பருவம் கண்டவிடத்தும், பாணன் தூது வந்தபொழுதும் தலைவனின் எண்ண அலைகள் அவனது காம உணர்வைக் காட்டுகின்றன. சொல்லுமதி பாண சொல்லுதோ றினிய நாடிடை விலங்கிய எம்வயின் நாடொறும் அரும்பனி கடந்த அருள்இல் வாடை தனிமை எள்ளும் பொழுதில் பனிமலர்க் கண்ணி கூறிய தெமக்கே" (விலங்கிய-ஒதுங்கிய; எள்ளும்.இகழ்தற் கிடனான.) என்று துரதாய் வந்த பாணனுக்குத் தலைவன் கூறியதைக்காண்க. இத்தகைய உணர்வினன் ஆகலின் சிலபோது பருவத்திற்கு முன்ன தாகவே வந்து தலைவியொடு கலந்து இன்புறுகின்றான். இத் தகைய நிகழ்ச்சிகளால் கவிஞர் தலைவியின் வேட்கையை மதிக்க வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றார். தலைவன் பரத்தையரோடு நீராடுதல் தலைவியின் ஊடலுக் குக் காரணமாயிற்று என்று புலவர்கள் பாடும் பொது வழக்கிற்கு மாறாகப் பேயனார் படைத்துக் க ட் டு ம் தலைவன் செயல் புரிகின்றான். - ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறி கார்தொடங்கின்றாற் காமர் புறவே; வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் தாழிருங் கூந்தல்! வம்மதி விரைந்தே." (ஆர்குரல்-நிறைந்த முழக்கம்; எழிலி-மேகம்; அழிதுளி-மிக்க துளி, புறவு-முல்லை நிலம்; வீழ்தரு-பெருகி வரும்; வம். வருக! - - . பிரிந்து சென்ற தலைவன் கார்காலம் தொடங்குவதற்குமுன் வந்து தன் இல்லக் கிழத்தியிடம் சொல்லும் பாடல் இது. தன் 7. ബി.-479. - 8. டிெ-411.