பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 519 மனைவியைப் புதுப்புனல் ஆட அழைக்கின்றான். முல்லைக் காட்டின் இயற்கை எழில்களைக் காட்டி இன்புறுகின்றான். “நின் நுதல்போல் மணக்கும் முல்லைக் காட்டில் நின் சாயல்போல் மயில் ஆடுவதைக் காண்பாய் (ஐங்-413); புள்ளும் மாவும் புணர்ந் தினிது களித்து ஆடுதலைக் நோக்காய் (டிெ 414); அழகிய பூம் புதர்களினிடையே மதக்களிறும் மடப்பிடியும் முயங்குவதைப் பாராய் (டிெ 416)’ என்றெல்லாம் தலைவிக்குக் காட்டி இயற்கை எழிலில் ஈடுபடுகின்றான் தலைவன். உயிர்கலந் தொன்றிய செயிர்தீர் கேண்மை பிரிந்துறல் அறியா, இருந்து கவவி தம்போல் நயம்வரப் புணர்ந்தன கண்டிகும் மடவரல் புறவின் மாவே." (உயிர்-உள்ளம்; செயிர்திர்-குற்றமற்ற பிரிந்து உறல் அறியா-பிரிய மாட்டாத விருந்து-புதுமையுற: கவவி. தழுவி, கண்டிகும்-காண்பாய்: மடவரல்-மடப்பமுடைய நங்கை புறவு-முல்லை நிலம்: மா-மானும் முயலும்! உயிர்க் கலப்பு, ஒன்றியகேண்மை, பிரிவறியாமை, மெய்யனைவு ஆகிய காதற்பண்புகள் முல்லை நில உயிர்களிடமும் காணப்பெறு கின்றன என்பதைச் சுட்டி உணர்த்துகின்றான் காதலன். பேய னாரின் இம்முல்லைக் காட்சிகள் குடும்ப நல்லுறவை வளர்ப்பன. களவிலாயினும் கற்பிலாயினும் முன்னியங்க வேண்டியவன் ஆடவன்; இவனது காதலியக்கம் நாணத்தால் உள்ளோடிக் கொண்டிருக்கும் தலைவியை இயங்கச் செய்யும். பேயனாரின் தலைவன் இல்லற நம்பியருக்கு வழிகாட்டியாக அமைகின்றான். செவிலி கூற்றில் வரும் பாடல்கள் மட்டிலும் பேயனாரின் புலமை வித்தகத்தைக் காட்டுதற்குப் போதுமானவை. இங்கு குழந்தையுடைய குடும்பத்தைப் பார்க்கின்றோம்; குழந்தை குடும்பத்தைப் பிணிக்கும் அரிய கருவியாக அமைகின்றது: தலைவன் பரத்தமை நினையாக் காதலனாகக் காட்சியளிக்கின் றான். கணவனைவிட்டுப் பிரிவறியாக் காதலி நம்முன் நிற்கின் றாள். இங்ங்ணம் யார்க்கும் வழிகாட்டும் இல்லியலாகவும் அமை கின்றது பேயனாரின் முதற்பத்து. புதல்வனை நடுவிற்கிடத்தித் தலைவனும் தலைவியும் பாயல் கொண்டுள்ளனர். இக்கிடக்கை 9. டிெ-419