பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 அகத்திணைக் கொள்கைகள் இனிது; அதன்கண் உலகு உடன் அடங்கும்' என்கின்றார் கவிஞர். தந்தை புதல்வனைக் காதலால் அணைத்துக் கிடந்தான்; தலைவியோ தன் ஆராக் காதலால் இருவரையும் அணைத்துக் கிடந்தாளாயினள் (ஐங்-409). மகன் விளையாடும்பொழுது காதலன் காதலியை அணைத்து இனிதிருந்து காண்கின்றான் (டிெ-406). இதோ செவிலி காட்டும் இன்னோர் இன்பக் காட்சி: மாலை முன்றில் குறுங்கால் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பின ஊரும் மகிழ்நகை இன்பப் பொழுதிற் கொத்தன்று மன்னே மென்பிணித் தம்ம பாணனது யாழே." முன்றில்-முற்றம்; ஊரும்-தவழ; மகிழ்-மகிழ்ச்சி நகை. நகைப்பு.) . . மாலைக் காலத்து வீட்டின் நிலா முற்றத்தில் ஒரு குறுங்கால் கட்டி லில் துணைவி அருகிருக்கத் தலைவன் படுத்திருக்கின்றான். தனயன் தந்தை மார்பிலேறி விளையாடுகின்றான். அவ்வமயம் பாணன் யாழை மிழற்றுகின்றான். இஃது ஒரு சிறிது:இடையூறாக இருக்கின்றது என்கின்றார் கவிஞர். மைந்தன் மழலை மொழிக்கு பாணனின் யாழ் ஓசை ஒரு சிறு இடையூறாக இருந்ததால் தந்தை மைந்தனின் மழலை மொழி கேட்டு மகிழமுடியவில்லை. இங்ங்ணம் அகக் காதலர்தம் பொழுதுபோக்கையும் கலையுணர்வையும் இலக்கியப்படுத்திக் காட்டுவர் பேயனார். இஃது புனைந்துரை யன்று: இன்றும் சில இடங்களில் காணத்தக்க காட்சியாகும். (iii) கபிலர் சங்கச் சான்றோர்களுள் தலை சிறந்தவர் கபிலர். . 'குறிஞ்சிக் கபிலன்' எனச் சிறப்பிக்கப்பெற்றவர். பலரைப் பாடிய பெருமையும் இவர்க்கு உண்டு; பலரால் பாடப்பெற்ற 10. டிெ-410,