பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/541

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 523 அன்னாய்,ன் வாழி!வேண் டன்னை ஒண்ணுதல் ஒலிமென் கூந்தல்என் தோழி மேனி விறலிழை நெகிழ்ந்த விவரும் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல்லுருவிற் கடவுட் பேணி நறையும் விரையும் ஒச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி-" இதில் தன் அருமை மகள் மேனி மெலிவைக் கண்டு தாய் கலக்க மடைகின்றாள்; பலரை உசாவுகின்றாள்; வெறியாட்டெடுக் கின்றாள்; தெய்வம் பரவுகின்றாள். அன்னையின் அவலநிலை யைக் கண்டும், தலைவியின் கற்பு மேம்பாட்டைக் கருதியும் தோழி உள்ளது சொல்ல முன் வருகின்றாள். இவ்வாறு அறத் தொடுநிலை என்னும் ஒரு துறையை முன் வைத்துப் பாடல் புனைவர் கபிலர். இங்ஙனம் அறத்தொடு நிற்கும் தோழி, எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல் கூறுதல் உசாவுதல் ஏதிடு தலைப்பாடு உண்மை செப்பும் கிளவியொடு' முதலிய ஏழு பகுதிகளைக் கொண்டு நிற்கின்றாள் என்பது பாட்டை ஊன்றிப் படிப்பார்க்குப் புலனாகும். இப்பாடலில் தோழியின் 'அறத்தொடு நிலைக்கு அன்னையின் வெறியாட்டெடுத்தலே ஏது வாகக் கூறப்பெறுகின்றது. இங்ஙனம் பன்னலம் பிறங்கும் பெருங் குறிஞ்சி' எனவும் வழங்கப்பெறும் கபிலர்பெருமானின் சொல்லோவியத்தை உயர்ந்த முறையில் தயாரிக்கப்பெற்ற ஓர் அரிய கிறிஸ்துமஸ் கேக் என்று சொல்லலாம், திருவேங்கடமுடையானின் சந்நிதியில் வினி யோகிக்கப்பெறும் இலட்டு என்று சொல்லி வைக்கலாம். இப் பாவினை நுகர்வோர் அவர் விரும்பும் பொருள் நயத்தினை யெல் லாம் மாந்திக் களிக்கலாம். 'மாம்பழச்சாறு பெய்த குடுவையின் எப்பக்கத்தே பொத்திட்டு நாவை நீட்டினும் அதன் வழியே ஒழுகும் அச்சாறு தித்தித்தல் போல, இவ்வரிய செய்யுளின் எவ்விடத்தே அறிவு தோயினும் ஆண்டு இனிமையே விளையா 14. டிெ - அடி (1-8) 15. பொருளியல் 12.